/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மதுக்கடை பாரில் தகராறு; அறுந்தது வாலிபரின் காது
/
மதுக்கடை பாரில் தகராறு; அறுந்தது வாலிபரின் காது
ADDED : அக் 23, 2024 11:24 PM
தொண்டாமுத்தூர் : மாதம்பட்டியில், டாஸ்மாக் மதுக்கடை பாரில் ஏற்பட்ட தகராறில், வாலிபரின் காதை அறுத்தவரை போலீசார் கைது செய்தனர்.
தேனியை சேர்ந்தவர் ராமச்சந்திரன், 35. மாதம்பட்டியில் குடும்பத்துடன் தங்கி கூலி வேலைக்கு சென்று வருகிறார். நேற்று முன்தினம் மாலை, அதே பகுதியை சேர்ந்த ஜெயராமன் என்பவர் மதுபோதையில், கீழே விழுந்து கிடந்தார்.
அவரை ராமச்சந்திரன் மற்றும் அருகில் இருந்தவர்கள் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது, அங்கு வந்த ஜெயராமனின் நண்பர்கள் பிரபாகரன் மற்றும் சிலர், ராமச்சந்திரன்தான், ஜெயராமனை தாக்கியதாக தவறாக எண்ணி, அவரை தாக்கியுள்ளனர்.
அதன்பின் இரவு, அதே பாரில் பிரபாகரன் மது அருந்திக்கொண்டிருந்துள்ளார். அங்கு வந்த ராமச்சந்திரன், தன்னை தாக்கியதற்காக, பிரபாகரனின் வலது காதை கத்தியால் அறுத்துள்ளார்.
தகவலறிந்து வந்த போலீசார், பிரபாகரனை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பேரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, ராமச்சந்திரனை கைது செய்தனர்.