/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பெண்களிடையே ஏற்பட்ட தகராறு: அவுட்டுக்காய் வீசியவர்கள் கைது
/
பெண்களிடையே ஏற்பட்ட தகராறு: அவுட்டுக்காய் வீசியவர்கள் கைது
பெண்களிடையே ஏற்பட்ட தகராறு: அவுட்டுக்காய் வீசியவர்கள் கைது
பெண்களிடையே ஏற்பட்ட தகராறு: அவுட்டுக்காய் வீசியவர்கள் கைது
ADDED : மே 01, 2025 04:36 AM
தொண்டாமுத்தூர்: ஆறுமுககவுண்டனூரில், பெண்களிடையே ஏற்பட்ட சண்டையில், மூதாட்டியின் வீட்டின் முன்பு அவுட்டுக்காய் வீசிய, பெண் உட்பட இருவரை போலீசார் கைது செய்தனர்.
ஆறுமுககவுண்டனூர், ஊர்நாயக்கர் வீதியை சேர்ந்தவர் ராமாத்தாள்,57; கூலித்தொழிலாளி. இவருக்கும், இவரது பக்கத்து வீட்டை சேர்ந்த பூங்கொடி என்பவருக்கும், கடந்த 6 மாதங்களுக்கு முன், தண்ணீர் பிடிப்பதில் சண்டை ஏற்பட்டது.
அதன்பின், இருதரப்பினருக்கும் அடிக்கடி வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்றுமுன்தினம், இதேபோல் ராமாத்தாளுக்கும், பூங்கொடிக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது.
அப்போது, அங்கு வந்த பூங்கொடியுடன் பழகி வரும், கே.ஜி. சாவடியை சேர்ந்த சுள்ளான் என்ற ஆறுச்சாமி,45 என்பவர், பூங்கொடிக்கு ஆதரவாக, ராமாத்தாளிடம் சண்டையிட்டு, பையில் வைத்திருந்த, 2 அவுட்டுக்காயை எடுத்து, ராமாத்தாளின் வீட்டின் முன்புள்ள ரோட்டில் வீசியுள்ளார்.
அவுட்டுக்காய் வெடித்து, ராமாத்தாளின் காலில் காயம் ஏற்பட்டது. அப்போது, பூங்கொடி கல்லை எடுத்து வீசியதில் ராமாத்தாளுக்கு தலையில் காயம் ஏற்பட்டது.
ராமாத்தாளின் மகன் ரத்தினசாமி அளித்த புகாரின் பேரில், பேரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, ஆறுச்சாமி மற்றும் பூங்கொடியை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

