/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பீர் பாட்டிலை உடைத்ததால் தகராறு; ஒருவருக்கு கத்திக்குத்து; ஐவருக்கு சிறை
/
பீர் பாட்டிலை உடைத்ததால் தகராறு; ஒருவருக்கு கத்திக்குத்து; ஐவருக்கு சிறை
பீர் பாட்டிலை உடைத்ததால் தகராறு; ஒருவருக்கு கத்திக்குத்து; ஐவருக்கு சிறை
பீர் பாட்டிலை உடைத்ததால் தகராறு; ஒருவருக்கு கத்திக்குத்து; ஐவருக்கு சிறை
ADDED : ஏப் 17, 2025 07:08 AM
கோவை; மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் வாலிபரை, கத்தியால் குத்திய ஐந்து பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவை, இடையர்பாளையம், இந்திரா நகரை சேர்ந்தவர் சுபாஷ், 27; தனியார் நிறுவன ஊழியர். கடந்த 14ம் தேதி சுபாஷ் தனது நண்பர் சூர்யா என்பவருடன், அதே பகுதியில் உள்ள டாஸ்மாக் பாருக்கு மது குடிக்க சென்றார். அப்போது சூர்யா, தான் குடித்த பீர் பாட்டிலை எடுத்து தரையில் உடைத்துள்ளார்.
அங்கிருந்த வாலிபர் ஒருவர், சூரியாவை கண்டித்தார். அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பார் ஊழியர்கள் சமாதானப்படுத்தி அனுப்பினர்.
இதைத்தொடர்ந்து, சுபாஷ் இடையர்பாளையத்தில் உள்ள தனது வீட்டின் அருகில் நின்று கொண்டிருந்தார். அப்போது பாரில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வாலிபர், தனது நண்பர்கள் 6 பேருடன் அங்கு வந்தார்.
சுபாஷை தகாத வார்த்தைகளால் திட்டி, சரமாரியாக தாக்கினர். அப்போது, அதில் ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து குத்தினார். சுபாஷின் சத்தம் கேட்டு, அருகில் இருந்தவர்கள் வருவதை பார்த்து, ஆறு பேர் கும்பல் தப்பியது.
சுபாஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கவுண்டம்பாளையம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்ததில், சுபாஷை கத்தியால் குத்தி, தாக்கியது வடவள்ளியை சேர்ந்த பிரதீப், 24, அர்ஜூன், 21, ராஜீவ் காந்தி நகரை சேர்ந்த சபீஸ், 20, பி.என். புதுாரை சேர்ந்த நகுல், 21, சிங்காநல்லுாரை சேர்ந்த கண்ணன், 22 ஆகியோர் என்பது தெரியவந்தது. ஐந்து பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். தப்பி ஓடிய ஒருவரை தேடி வருகின்றனர்.