/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பயணியரை ஏற்றிச்செல்வதில் வாக்குவாதம்; ரயில்வே ஸ்டேஷன் அருகே பரபரப்பு
/
பயணியரை ஏற்றிச்செல்வதில் வாக்குவாதம்; ரயில்வே ஸ்டேஷன் அருகே பரபரப்பு
பயணியரை ஏற்றிச்செல்வதில் வாக்குவாதம்; ரயில்வே ஸ்டேஷன் அருகே பரபரப்பு
பயணியரை ஏற்றிச்செல்வதில் வாக்குவாதம்; ரயில்வே ஸ்டேஷன் அருகே பரபரப்பு
ADDED : நவ 12, 2024 05:30 AM

பொள்ளாச்சி ; பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷன் முன், பயணியரை ஏற்றிச்செல்வதில் ஆட்டோ ஓட்டுநர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டதால், பயணிகள் அதிருப்தி அடைந்தனர்.
பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷனில் இருந்து, பயணியரை ஏற்றிச்செல்ல இரண்டு ஆட்டோ ஸ்டாண்டுகள் உள்ளன. அவ்வப்போது பயணியரை ஏற்றிச்செல்வதில் ஆட்டோ ஓட்டுநர்களிடையே போட்டா போட்டி நிலவுகிறது.
இந்நிலையில் நேற்று காலை ரயில்வே ஸ்டேஷனில் இருந்து வெளியே வந்தவர்களை ஏற்ற ஆட்டோ ஒட்டுநர்களிடையே போட்டி ஏற்பட்டது.
இரண்டு ஆட்டோ ஸ்டாண்டை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்களும், மாறி மாறி வாகனங்களை ரோட்டில் நிறுத்திக்கொண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, ஒரு ஆட்டோ ஓட்டுநர், மற்றொரு ஆட்டோ மீது தட்டி சப்தம் எழுப்பினார். இரு தரப்பும், வாகனங்களை ரோட்டிலேயே நிறுத்திக்கொண்டு சப்தம் போட்டுக்கொண்டதால், பயணியர் அதிருப்தி அடைந்தனர்.
அவர்களை இந்த ஆட்டோவில் ஏறுங்கள் என மாறி, மாறி கூறி வாக்குவாதம் செய்து கொண்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மேற்கு போலீசார், இரு தரப்பு ஆட்டோ ஓட்டுநர்களை அழைத்து எச்சரித்ததுடன், இதுபோன்று தொடர்ந்து நடந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்.
பயணிகள் கூறுகையில், 'பஸ் ஸ்டாண்டுக்கு செல்ல ஆட்டோவில் செல்ல வந்தால் இரு தரப்பும் மாறிச் சண்டை போட்டுக்கொள்வதால் தேவையில்லாத மன உளைச்சல் ஏற்படுகிறது. வீண் அசம்பாவிதங்கள் நடக்குமோ என்ற அச்சமான சூழல் உள்ளது. இது குறித்து வட்டார போக்குவரத்து அதிகாரிகள், போலீசார் இணைந்து உரிய தீர்வு காண வேண்டும்,' என்றனர்.