/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தமிழகத்துக்கு அவமானம்: அர்ஜுன் சம்பத்
/
தமிழகத்துக்கு அவமானம்: அர்ஜுன் சம்பத்
ADDED : நவ 04, 2025 12:52 AM
கோவை:  இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் அறிக்கை:
அண்டை மாநிலங்களிலிருந்து, கல்விக்காகவும், வேலைக்காகவும் கோவைக்கு வந்து, பலர் பயன் பெறுகின்றனர்.
விமான நிலைய சுற்றுப்பகுதியில், ஏராளமான கல்வி நிறுவனங்கள் மருத்துவமனைகள் தகவல் தொழில்நுட்ப மையங்கள் இருக்கிற காரணத்தினால், இப்பகுதியை குறிவைத்து கஞ்சா மற்றும் போதைப்பொருள் விற்பனை அதிகரித்து வருகிறது.
இதன் காரணமாக, இப்பகுதியில் குற்றங்களும் பெருகி வருகின்றன.பெண்களுக்கு எதிரான, ஈவ்டீசிங் உள்ளிட்ட குற்றங்களும் அதிகமாக நடைபெற்று வருகிறது.
பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய தி.மு.க., அரசு, இவ்விஷயத்தில் கவனம் கொடுக்காமல், அரசுக்கு எதிராக செயல்படும் சமூக ஊடக செயல்பாட்டாளர்களை கைது செய்வதிலும், பொய் வழக்கு போடுவதிலும் கவனம் செலுத்தி வருகிறது. இது தமிழகத்துக்கு அவமானம்.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

