/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
முதல்வர் கட்டுப்பாட்டில் போலீஸ்துறை இல்லை; பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டி
/
முதல்வர் கட்டுப்பாட்டில் போலீஸ்துறை இல்லை; பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டி
முதல்வர் கட்டுப்பாட்டில் போலீஸ்துறை இல்லை; பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டி
முதல்வர் கட்டுப்பாட்டில் போலீஸ்துறை இல்லை; பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டி
ADDED : நவ 04, 2025 12:51 AM
கோவை:  “முதல்வரின் கட்டுப்பாட்டில் போலீஸ் துறை இல்லை,” என, கோவையில் பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
கோவை பா.ஜ., அலுவலகத்தில், நயினார் நாகேந்திரன் அளித்த பேட்டி:
கோவையில் பாலியல் வன்முறை கொடூரம் நடந்திருப்பது, இந்த ஆட்சியில் காவல் துறை எவ்வளவு மோசமாக இருக்கிறது என்பதை காட்டுகிறது.
தி.மு.க., திராவிட ஆட்சி, பெண்களுக்கு எதிரான குற்றங்களை கொண்ட பாலியல் மாடல் ஆட்சியாக உள்ளது. 2013ல், துாத்துக்குடி தான்குளத்தில் பெண் ஒருவர் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டார்.
அப்போது எதிர்க்கட்சியாக இருந்த ஸ்டாலின், கனிமொழியோடு சென்று போராட்டமே நடத்தினார். கரூரில் 41 பேர் இறப்புக்கு, இரவோடு இரவாக வந்தார் முதல்வர். தற்போது கோவையில் நடந்துள்ள சம்பவத்துக்கு முதல்வரோ, கனிமொழியோ எதுவும் பேசவில்லை. கோவை நகரம், போதை பொருள் தலைநகராக மாறி வருகிறது.
ஆர்ப்பாட்டம் நாளை மறுதினம் இதை கண்டித்து, மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்துவோம். பெண்களுக்கும், மக்களுக்கும் பாதுகாப்பாக பா.ஜ., இருக்கும். போலீசார் தனிப்படை அமைப்பது பெரியதல்ல; இனிமேல் நடக்காமல் பாதுகாக்க வேண்டும். பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை கண்காணிப்புடன் வளர்க்க வேண்டும். ஒதுக்குப்புற இடங்களை, போலீசார் கண்காணிக்க தவறி விட்டனர். சட்டம் ஒழுங்கை பாதுகாக்க, போலீசாரை திறம்பட நடத்த வேண்டும்.
மது விற்பனையை அதிகரிக்க, 'டார்கெட்' வைத்துள்ள அரசு, குற்றங்களை குறைக்க நடவடிக்கை எடுக்கவில்லை. முதல்வர் கட்டுப்பாட்டில் போலீஸ் துறை இல்லை. இது காவல்துறையின் மெத்தன போக்கு.  இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
'18,200 பாலியல்
பலாத்காரங்கள்'
 ''கடந்த மே மாதம் வரை 18,200 பாலியல், பலாத்கார நிகழ்வுகள் நடந்துள்ளன. 6000 கொலை குற்றங்கள், 31 'லாக் அப்' மரணங் கள் நடந்துள்ளன. குழந்தைகளுக்கு எதிரான குற்றங் கள், 15 சதவீதமும், போக்குவரத்து குற்றங்கள் 50 சதவீதமும் அதிகரித்துள்ளன. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை,'' என்றார் நயினார் நாகேந்திரன்.
பெண்கள்
அஞ்சுகின்றனர்
 நான்கரை ஆண்டுகளாக, ஒவ்வொரு நாளும் ஒருவித பதற்றத்துடனேயே நம் பொழுது விடிகிறது. எந்த ஊரில், எந்த பெண்ணின் வாழ்வு சூறையா டப்பட்டதோ என்ற பயத்துடனேயே செய்தித்தாள்களை புரட்ட வேண்டியிருக்கிறது. வீட்டி ல் இருந்தாலு ம் சரி, வெளியில் போனாலும் சரி, பெண்கள் வேட்டையாடப்படுகின்றனர். 'தமிழகத்தை தலைகுனிய விட மாட்டேன்' என வெட்டி வசனம் பேசும் தி.மு. க., ஆட்சியில், நம் வீட்டு பெண்கள் வெளியில் தலைகாட்டவே அஞ்சுகின்றனர். ஆனால், முதல்வர் ஸ்டா லின் கவலையின்றி கம்பு சுற்றிக் கொண்டிருக்கிறார்.

