/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
முதல்வர் தன் பொறுப்புகளில் தோற்றுவிட்டார்: அண்ணாமலை குற்றச்சாட்டு
/
முதல்வர் தன் பொறுப்புகளில் தோற்றுவிட்டார்: அண்ணாமலை குற்றச்சாட்டு
முதல்வர் தன் பொறுப்புகளில் தோற்றுவிட்டார்: அண்ணாமலை குற்றச்சாட்டு
முதல்வர் தன் பொறுப்புகளில் தோற்றுவிட்டார்: அண்ணாமலை குற்றச்சாட்டு
ADDED : நவ 04, 2025 12:51 AM
கோவை:  “முதல்வர் தன் கடமையில் தோல்வியடைந்திருக்கிறார். எப்படி காவல்துறையிடம் இருந்து வேலை வாங்க வேண்டும் என்பது முதல்வருக்குத் தெரியவில்லை. முதல்வர் தனது பொறுப்புகளில் இருந்து முழுமையாக தோற்றிருப்பதை, கோவை சம்பவம் மீண்டும் நமக்கு உணர்த்துகிறது,” என அண்ணாமலை கூறினார்.
இதுதொடர்பாக, பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை 'தினமலர்' நாளிதழுக்கு அளித்த சிறப்பு பேட்டி:
சுதந்திரம் கிடைத்து இத்தனை ஆண்டுகள் ஆனபோதும், ஒரு பெண் சுதந்திரமாக வீதியில் செல்ல முடியவில்லை என்பது வருத்தமான ஒன்று.
யாருக்கும், யாரை வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் பார்ப்பதற்கு உரிமை இருக்கிறது; ஆனால், துரதிருஷ்டவசமான சம்பவம் நடந்திருக்கிறது. கயவர்கள் வருகிறார்கள் என்றால், காவல் துறை மீது அவர்களுக்கு மரியாதை இல்லையா; சட்டத்தின் மீது நம்பிக்கை இல்லையா, இல்லை சட்டம் எங்களை எதுவும் செய்யாது என்ற அகங்காரமா? என்ற கேள்விகள் எழுகின்றன.
காவல்துறைக்கு சுதந்திரமில்லை தமிழக காவல்துறை மிகச்சிறந்தது. ஆனால், சுதந்திரமாக செயல்படுவதில்லை. தி.மு.க., ஆட்சியில் தமிழக காவல்துறையின் செயல்பாடு மிக மோசமாக உள்ளது.
காவல்துறைக்கு முழு சுதந்திரம் கொடுக்க வேண்டும். கயவர்கள் மீது கை வைக்க அனுமதி கொடுக்க வேண்டும்.
முதல்வர் பொறுப்பேற்க வேண்டும் தமிழகத்தைத் தலை குனிய விடமாட்டோம் என சூளுரைக்கும் முதல்வர், இதற்கு பொறுப்பேற்க வேண்டும். ஏனெனில் அவர்தான் உள்துறை அமைச்சராகவும் உள்ளார்.  அவர் தனது கடமையை சரியாக செய்யவில்லை.
தமிழகத்தில் பெண்களுக்கு அச்சுறுத்தல் கடந்த 4 ஆண்டுகளில் தமிழகத்தில் பெண்களுக்கு அச்சுறுத்தல் இருக்கிறது; பொது இடங்களில் பாதுகாப்பு இல்லை என்பது தற்போது நிரூபணமாகி வருகிறது.
இது தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியைப் பாதிக்கும். முதல்வர்  காவல் துறைக்கு முழு சுதந்திரம் கொடுத்து கயவர்களைக் கட்டிப்போட வேண்டும்.
எப்படி காவல்துறையிடம் இருந்து வேலை வாங்க வேண்டும் என்பது தெரியவில்லை. முதல்வர் தனது பொறுப்புகளில் இருந்து முழுமையாக தோற்றிருப்பதை, கோவை சம்பவம் மீண்டும் நமக்கு உணர்த்துகிறது,''
இவ்வாறு, அண்ணாமலை தெரிவித்தார்.

