/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காப்பாத்துங்க... காப்பாத்துங்க: நள்ளிரவில் கதறிய மாணவி
/
காப்பாத்துங்க... காப்பாத்துங்க: நள்ளிரவில் கதறிய மாணவி
காப்பாத்துங்க... காப்பாத்துங்க: நள்ளிரவில் கதறிய மாணவி
காப்பாத்துங்க... காப்பாத்துங்க: நள்ளிரவில் கதறிய மாணவி
ADDED : நவ 04, 2025 12:50 AM

கோவை:  நள்ளிரவில், மாணவி பாலியல் பலாத்காரம் செய்ய, மூவர் இழுத்துச் சென்ற போது, காப்பாற்றக் கோரி கதறியது தெரியவந்துள்ளது.
நள்ளிரவில் மாணவி யின் கதறல் காரில் இருந்த இளைஞரை அரிவாளால் வெட்டியதால் அவர் மயக்கமடைந்தார். அதன் பின்  மாணவியை மர்மநபர்கள் இழுத்து சென்றுள்ளனர். அப்போது மாணவி, 'காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்' என, கதறி சத்தமிட்டுள்ளார். மாணவியின் கதறல், அருகில் உள்ள சிலருக்கு கேட்டுள்ளது. அவர்கள் சென்று பார்த்தபோது, இருட்டில் அங்கு யாரும் இல்லை. அதற்குள் மூவரும் மாணவியை மறைவான இடத்துக்கு இழுத்துச் சென்றுள்ளனர்.
பழைய குற்றவாளிகளா?
மாணவி பாலியல் பலாத்கார வழக்கில், போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் குற்ற வழக்குகளில் தொடர்புடைய முன்னாள் குற்றவாளிகள் யாருக்காவது தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர். இதற்காக பழைய குற்றவாளிகளின் புகைப்படங்களை, மாணவியிடம் காட்டி அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
ஒரு கொலை; பல கஞ்சா வழக்குகள் சம்பவம் நடந்த பிருந்தாவன் நகர் பகுதியில் உள்ள காலியிடம், எப்போதும் ஆள் ஆரவாரமற்று காணப்படும். பகலில் அப்பகுதி வழியாக செல்வதற்கே பலருக்கும் அச்சம் ஏற்படும் நிலையில் அப்பகுதி இருக்கும். 2018ம் ஆண்டு அப்பகுதியில் இருந்த டாஸ்மாக் மது பாரில் கொலை சம்பவம் நடந்துள்ளது. அப்பகுதியில் கஞ்சா விற்பனை எப்போதும் ஜோராக நடக்கும். கஞ்சா பழக்கமுள்ளவர்கள், மது அருந்துபவர்கள் என, பலரும் அப்பகுதியில் சுற்றி வந்துள்ளனர்.
வானதி சீனிவாசன் ஆய்வு ;கல்லுாரி மாணவி, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட இடத்துக்கு சென்ற, பா.ஜ., தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் ஆய்வு செய்தார். மாணவி மற்றும் இளைஞர் காரில் அமர்ந்திருந்த போது, தாக்கப்பட்ட இடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அவர் ஆய்வு செய்தார்.
விடுதிகள், வீடுகளில் விசாரணை சம்பவம் நடந்த பகுதிக்கு சற்று தொலைவில், குடியிருப்புகள், கல்லுாரி விடுதிகள் உள்ளன. போலீசார் நேற்று அதிகாலை அங்கு சென்று குடியிருப்புகள், கல்லுாரி விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்களிடம் விசாரணை நடத்தினர்.
சட்டவிரோத மது விற்பனை ச ம்பவம் நடந்த இடத்தின் அருகே, சட்ட விரோதமாக மதுவிற்பனை நடந்து வந்துள்ளது. இதுகுறித்து அறிந்த நாம் தமிழர் கட்சியினர், அங்கு சென்று சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட நபரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த மதுபாட்டில்களை உடைத்தனர்.
யாரையும் பிடிக்காத மோப்பநாய் சம்பவ இடத்துக்கு வந்த தடயவியல் நிபுணர்கள், காரில் பதிவாகி இருந்த கைவிரல் ரேகைகளை பதிவு செய்தனர். மோப்பநாய் டபி, சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டது. கார் நிறுத்தப்பட்ட இடத்தில் இருந்து சிறிது தூரம் ஓடியது. அதுபோன்று அந்த மாணவி மீட்கப்பட்ட இடத்தில் இருந்தும், அங்கும் இங்கும் ஓடியது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை.

