/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும்'
/
'ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும்'
ADDED : நவ 04, 2025 12:48 AM
கோவை:  இ.கம்யூ., கோவை மாவட்டக்குழு சார்பில், மாவட்ட செயலாளர் சிவசாமி :
இப்பகுதியில் போதைப் பொருள் பயன்பாடு, வழிப்பறி போன்ற குற்றச் செயல்கள் நடப்பதாக தொடர் புகார்கள் உள்ளன. இதுபோன்ற பகுதிகளிலும், கல்லுாரிகள், தனியார் பெண்கள் விடுதிகள், ஐ.டி. நிறுவனங்கள் உள்ள பகுதிகளிலும், இரவு நேரங்களில் போலீசார் ரோந்து பணியை அதிகப்படுத்த வேண்டும்.
தனியார் விடுதிகளில் பெண்களின் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்த, தமிழக அரசும், போலீசாரும் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பாதுகாப்பில் மெத்தனம் காட்டும் பெண்கள் விடுதிகளின் உரிமத்தை, ரத்து செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட மாணவிக்கு, தமிழக அரசு உரிய மருத்துவ சிகிச்சையும், மனநல ஆலோசனையும் வழங்க வேண்டும். சிகிச்சை செலவுகளை அரசே ஏற்க வேண்டும். குற்றவாளிகளை விரைவில் கைது செய்து, சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுத் தரவேண்டும்.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

