/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆரோக்கிய மராத்தான் திரளானோர் பங்கேற்பு
/
ஆரோக்கிய மராத்தான் திரளானோர் பங்கேற்பு
ADDED : ஜன 08, 2024 01:36 AM

கோவை;கோவை விழாவின் ஒரு பகுதியாக நேற்று நடந்த மராத்தான் போட்டியில், ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் உற்சாகமாக பங்கேற்றனர்.
கோவை விழாவின் 16ம் பதிப்பு, ஜன., 2ம் தேதி முதல் 8ம் தேதி வரை நடக்கிறது. இதையொட்டி, கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக, உடல் ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு ஏற்பட்டுத்தும் வகையில், 'ஆரோக்கியமான கோவை' என்ற பெயரில், நேரு ஸ்டேடியம் அருகில்நேற்று, மராத்தான் போட்டி நடந்தது.
போட்டியை, கோவை மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார், போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் ஆகியோர் துவக்கி வைத்து, மராத்தான் ஓட்டத்திலும் பங்கேற்றனர்.
2.5 கிமீ., 5கிமீ., 10கிமீ., என மூன்று பிரிவுகளாக, மராத்தான் நடத்தப்பட்டது.
இந்த மராத்தானில் சிறுவர்கள், பொது மக்கள், போலீசார் என ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.