/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சுவைக்கு விருந்தாகும் அரோமா இனிப்புகள்
/
சுவைக்கு விருந்தாகும் அரோமா இனிப்புகள்
ADDED : அக் 24, 2024 10:07 PM

ஆண்டு முழுவதும் உறவுகளுக்கு சீர் செய்த போதும், தீபாவளிக்கு ஸ்வீட் கொடுத்து பரஸ்பரம், வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்வதில் இருக்கும் சந்தோஷமே தனிதான்.
இன்றும் இந்த உலகம் உயிர்ப்புடன் இருக்க தமிழர்களின் இந்த பழக்கமும் ஒரு காரணம்.
இந்த தீபாவளிக்கு பல்வேறு நிறுவனங்களும் தங்களது புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளன. அந்த வகையில் அரோமா நிறுவனம் சார்பில் பல்வேறு புதிய தயாரிப்புகள் வாடிக்கையாளர்களின் சுவைக்கு விருந்தாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. நிறுவனத்தின் தயாரிப்பான மதுரம் பெட்டகத்தில், பட்டர் ஸ்காட்ச் சோன்பப்டி, கேசர் பேடா, பாம்பே அல்வா, தட்டை, மிக்சர், தேன் குழல், நெய் மைசூர்பாக், ஸ்பெஷல் லட்டு, ரவா லட்டு, பாதுஷா, அதிரசம் ஆகிய, 11 வகையான பலகாரங்கள் இடம் பெற்றுள்ளன. இதுதவிர ட்ரெடிஷனல் ட்ரிட், ஸ்பார்கில் லைட் உள்ளிட்ட இனிப்பு வகைகளையும் அறிமுகப்படுத்தியுள்ளது.
அரோமா குழும நிறுவனர் பொன்னுசாமி கூறியதாவது:
அரோமா நிறுவனம் சார்பில் பாரம்பரிய இனிப்புகளை தயாரித்து வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறோம். இதற்கு நல்ல வரவேற்பு கிடைக்கிறது. அனைத்து தரப்பினரின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் இனிப்புகளை தயாரிக்கிறோம். இந்தாண்டு தீபாவளிக்கும் புதிதாக இனிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதில், ட்ரெடிஷனல் ட்ரிட், ஸ்பார்கில் லைட், மீட்டிங் மொமன்ட்ஸ், நட்டி கிளாசிக் உள்ளிட்ட இனிப்பு தொகுப்புகளை வழங்குகிறோம். எங்களது மதுரம் பெட்டகம் அனைத்து தரப்பினராலும், அதிகளவில் விரும்பப்படுகிறது. இதுதவிர, மைசூர் பாக், கேரட் மைசூர் பாக், பீட்ரூட் மைசூர் பாக், பேரிச்சம் பழ மைசூர் பாக், மோடிசூர் லட்டு, பூந்தி லட்டு, சோன்பப்டி, ஏலக்காய் சோன்பப்டி, மில்க் பேடா, ஜிலேபி, பழ அல்வா, காஜு கமல் மற்றும் கிரிஸ்பி காரம் உள்ளிட்ட பலகாரங்களும் விற்பனை செய்யப்படுகின்றன. வாடிக்கையாளர்களின் தேவையை அறிந்து ஒவ்வொரு இனிப்பும் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு, அவர் கூறினார்.