/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
செப்.,30க்குள் வங்கிகளில் கணக்கு துவங்க ஏற்பாடு
/
செப்.,30க்குள் வங்கிகளில் கணக்கு துவங்க ஏற்பாடு
ADDED : ஜூலை 08, 2025 12:23 AM
கோவை; கிராமப்புறங்களில் உள்ள மக்களுக்கு, வங்கிக் கணக்குகள் துவக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதால், அதற்கான பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
தனிநபர் கடன், வீட்டுக்கடன், வாகனக் கடன், கல்வி கடன், வணிகக் கடன், விவசாய கடன் என பல்வேறு வகையான கடன்களை வங்கிகள் வழங்கி வருகின்றன. வங்கி ஊழியர்கள், ஒவ்வொரு பகுதிகளிலும் இதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், வரும் செப்., 30க்குள் அனைத்து பகுதிகளிலும் உள்ள மக்களுக்கு, வங்கிக் கணக்குகள் அல்லது தபால் அலுவலகத்தில் கணக்குகள் துவங்க, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மத்திய அரசு சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.
முக்கியமாக, கிராமப்புற மக்களுக்கு வங்கியில் கணக்கு துவக்கி வைப்பதற்கான நடவடிக்கைகள், முடுக்கி விடப்பட்டுள்ளதாக, வங்கி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.