/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பிடிவாரன்ட் வி.சி., நிர்வாகி கைது
/
பிடிவாரன்ட் வி.சி., நிர்வாகி கைது
ADDED : மார் 01, 2024 07:32 AM
திருப்பூர் : அடிதடி உள்ளிட்ட வழக்குகளில் கோர்ட்டில் ஆஜராகாத விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில துணை செயலாளரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூரைச் சேர்ந்தவர் துரை வளவன், 46. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணை செயலாளர். கடந்த 2010ல் அடிதடி வழக்கு; 2015ல் மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி மதுக்கடை மீது கல் வீசி தாக்க திட்டம் தீட்டிய வழக்கு; 2019ல் அடிதடி வழக்கு என, மூன்று வழக்குகளில் திருப்பூர் தெற்கு போலீசாரால் இவர் கைது செய்யப்பட்டார்.
வழக்கு விசாரணை திருப்பூர் ஜே.எம்- 2 கோர்ட்டில் நடந்து வருகிறது. கடந்த 21ம் தேதி வழக்கு விசாரணையின் போது துரை வளவன் ஆஜராகவில்லை. மூன்று வழக்குகளிலும் கோர்ட் பிடிவாரன்ட் வழங்கி உத்தரவிட்டது. இவ்வழக்கு தொடர்பாக, துரை வளவனை தெற்கு போலீசார் கைது செய்தனர்.

