ADDED : பிப் 08, 2025 05:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போத்தனுார்; கோவை குனியமுத்துார் போலீஸ் ஸ்டேஷன் எஸ்.ஐ., அழகுமாரி செல்வம். கடந்த, 4ம் தேதி இரவு குளத்துபாளையம், பாலு அவென்யூ பகுதியில் ரோந்து சென்றார்.
சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த ஒருவரிடம் விசாரித்தார். வெங்கிட்டாபுரம், அம்மன் கோவில் வீதியை சேர்ந்த முஹமது ரிஸ்வான். 36 தற்போது பாலு அவென்யூவில் வசித்து வருவதும் தெரிந்தது.
அவர் விற்பனைக்காக, 1.1 கி.கிராம் கஞ்சா வைத்திருப்பதும் தெரியவந்தது. கஞ்சா, அவரது வாகனம், மொபைல் போனை பறிமுதல் செய்த எஸ்.ஐ., அவரை கைது செய்தார்.