/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கஞ்சா வழக்கில் கைது; பாய்ந்தது 'குண்டாஸ்'
/
கஞ்சா வழக்கில் கைது; பாய்ந்தது 'குண்டாஸ்'
ADDED : பிப் 17, 2025 12:08 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; கோவை சூலுார் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதியில், கஞ்சா பதுக்கி வைத்து விற்கப்படுவதாக, போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு சென்ற போலீசார் சோதனை நடத்தினர். அதில், ஒன்பது கிலோ கஞ்சா விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டது தெரிந்தது.
கஞ்சா பதுக்கி வைத்திருந்த தேனி மாவட்டத்தை சேர்ந்த பிரபாகரன், 40 என்பவரை சிறையில் அடைத்தனர். இவர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க, மாவட்ட எஸ்.பி., கார்த்திகேயன், கலெக்டர் பவன்குமாருக்கு பரிந்துரைத்தார். கலெக்டர், பிரபாகரனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.