/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதானவர் தற்கொலை பாலக்காடு அருகே பரபரப்பு
/
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதானவர் தற்கொலை பாலக்காடு அருகே பரபரப்பு
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதானவர் தற்கொலை பாலக்காடு அருகே பரபரப்பு
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதானவர் தற்கொலை பாலக்காடு அருகே பரபரப்பு
ADDED : மார் 14, 2024 11:15 PM

பாலக்காடு;பாலக்காடு அருகே போதைப்பொருள் (ஹாஷிஷ் ஆயில்) கடத்திய வழக்கில் கைதானவர், கலால்துறை அலுவலக லாக்கப்பில் துாக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இடுக்கி மாவட்டம் உடும்பஞ்சோலை கொன்னத்தடியைச்சேர்ந்த ஷோஜோ ஜோனின் 55, எனபவர், பாலக்காடு நகர் அருகே உள்ள காடாங்கோடு வாடகை வீட்டில் இருந்து வருகிறார்.
கேரளா மாநிலம் கலால் துறை கமிஷனருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிபடையில், பாலக்காடு கலால் இன்ஸ்பெக்டர் சுரேஷின் தலைமையிலான படையினர், இவரது வீட்டில் நேற்று முன்தினம் இரவு சோதனை நடத்தினர்.
அப்போது, 2 கிலோ போதைப்பொருளான ஹாஷிஷ் ஆயில் மறைத்து வைத்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து லாரி டிரைவரான ஷோஜோ ஜோனை கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில், திருச்சூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் விற்பனை செய்வதற்காக, கொள்முதல் செய்த இவை 25 லட்சம் ரூபாய் மதிப்பு இருக்கும் என தெரியவந்தது.
நேற்று நீதிமன்றத்தில் அவரை ஆஜர் செய்வதற்காக, நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
நேற்று அதிகாலை 3:00 மணி அளவில் கலால் துறையின் பாலக்காடு அலுவலக லாக்கப்பில் (செல்லில்) ஷோஜோ ஜோன், அணிந்திருந்த வேட்டியை பயன்படுத்தி துாக்கிலிட்டுள்ளார்.
இதை கண்ட அதிகாரிகள் அவரை மீட்டு, பாலக்காடு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், அவர் ஏற்கனவே இறந்துள்ளாக டாக்டர்கள் தெரிவித்தனர். இவர் துாக்கிட்டு கொள்ளும் காட்சி, அங்கு பொருத்தப்பட்ட சி.சி.டி.வி., கேமராவில் பதிவாகி உள்ளது.
இந்நிலையில், அவரது மனைவி ஜோதி, தனது கணவரது சாவில் மர்மம் இருப்பதாக புகார் தெரிவித்துள்ளார்.
சம்பவத்தில், துறை தரப்பு விசாரணையின் ஒரு பகுதியாக, பணியில் தொய்வு ஏற்படும் வகையில் நடந்து கொண்ட, நேற்றுமுன்தினம் இரவு பணியில் இருந்த சிவில் கலால் அதிகாரிகளான மது, ரஞ்சித் ஆகியோரை சஸ்பெண்டு செய்து, கலால் துறை கமிஷனர் உத்தரவிட்டார்.
அதே நேரத்தில், பாலக்காடு மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை துவக்கியுள்ளனர்.

