ADDED : ஏப் 09, 2025 10:28 PM
குண்டர் சட்டத்தில் கைது
கோவில்பாளையம் அருகே வழியாம் பாளையத்தில் மணிகண்டன் என்பவர் ஓட்டல் நடத்தி வருகிறார். இந்த ஓட்டலில், தூத்துக்குடி மாவட்டம், அத்திமரப்பட்டியைச் சேர்ந்த சங்கர், 24, என்பவர் பணிபுரிந்து வந்தார். அதே ஓட்டலில் கீரணத்தத்தைச் சேர்ந்த ராமன், 23, பணிபுரிந்து வந்தார்.
கடந்த பிப். 30ம் தேதி இருவரும் தங்கியிருந்த அறையில் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது சங்கர், ராமனை கத்தியால் குத்தி கொன்று விட்டு தப்பி விட்டார். தலைமறைவான சங்கரை போலீசார் தேடிப்பிடித்து கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் தொடர்ந்து குற்றச் செயலில் ஈடுபடுவதால் சங்கரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கோவை ரூரல் போலீஸ் எஸ்.பி., கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து கோவை கலெக்டர் பவன் குமார், சங்கரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவு பிறப்பித்தார். கோவில்பாளையம் போலீசார் கலெக்டரின் உத்தரவை கோவை மத்திய சிறையில் உள்ள சங்கரிடம் வழங்கினர்.