தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ குண்டர் சட்டத்தில் கைது

 குண்டர் சட்டத்தில் கைது

 குண்டர் சட்டத்தில் கைது


ADDED : ஆக 08, 2026 03:57 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 08, 2026 03:57 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

குண்டர் சட்டத்தில் கைது கடந்த மாதம் சோமனுார் பிரிவு, அன்னுார், கரியாம்பாளையம், கணேசபுரம் ஆகிய இடங்களில், ஒரே இரவில் 12 கடைகளில் பூட்டு உடைக்கப்பட்டு, திருட்டு போனது. அன்னுார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இந்நிலையில், கெம்பநாயக்கன்பாளையம் ரமேஷ், 38 என்பவரை மிரட்டி, மொபைல் போன் மற்றும் பணத்தை இருவர் பறித்தனர். விசாரணையில், கள்ளக்குறிச்சி மாவட்டம், மலையனுாரை சேர்ந்த ஆறுமுகம், 29 மற்றும் பாண்டி, சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

ஆறுமுகம், தொடர்ந்து பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டு வந்ததால், கோவை ரூரல் போலீஸ் எஸ்.பி., பவன்குமார் பரிந்துரையில், கலெக்டர் பவன்குமார் பிறப்பித்த உத்தரவின் பேரில், ஆறுமுகம் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இதற்கான உத்தரவு நகல், கோவை மத்திய சிறையில் உள்ள ஆறுமுகத்திடம் வழங்கப்பட்டது.

யானை தாக்கி பெண் காயம் துடியலூர் வரப்பாளையத்தில் வசிக்கும் பாப்பாள், 55, நேற்று அதிகாலை வீட்டை விட்டு வெளியே வந்தார். வீட்டின் முன்புறம் நின்று கொண்டிருந்த யானை பாப்பாளை தாக்கியது. அவருக்கு காலில் எலும்பு முறிவு, வயிற்றுப் பகுதியில் காயம் ஏற்பட்டது. வீட்டருகே இருந்தவர்கள், கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தடாகம் போலீசார் மற்றும் கோவை வனத்துறையினர் விசாரிக்கின்றனர்.

ஆற்றில் குளிக்க சென்றவர் பலி சிறுமுகை அடுத்துள்ள ராமர் கோவில் பகுதியை சேர்ந்த வினோத்குமார், 40. பவானி ஆற்றில் குளிக்கச் சென்றார். மீண்டும் வீடு திரும்பவில்லை. சகோதரி ஜோதிமணி சிறுமுகை போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். போலீசார் தேடி வந்த நிலையில், புதுக்காடு பவானி ஆற்றின் அருகே, சடலமாக மீட்டனர். மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரி சோதனைக்கு அனுப்பினர்.---

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us