ADDED : ஆக 08, 2026 03:56 AM
யானை தாக்கி பெண் காயம்
துடியலூர் வரப்பாளையத்தில் வசிக்கும் பாப்பாள், 55, நேற்று அதிகாலை வீட்டை விட்டு வெளியே வந்தார். வீட்டின் முன்புறம் நின்று கொண்டிருந்த யானை பாப்பாளை தாக்கியது. அவருக்கு காலில் எலும்பு முறிவு, வயிற்றுப் பகுதியில் காயம் ஏற்பட்டது. வீட்டருகே இருந்தவர்கள், கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தடாகம் போலீசார் மற்றும் கோவை வனத்துறையினர் விசாரிக்கின்றனர்.
ஆற்றில் குளிக்க சென்றவர் பலி
சிறுமுகை அடுத்துள்ள ராமர் கோவில் பகுதியை சேர்ந்த வினோத்குமார், 40. பவானி ஆற்றில் குளிக்கச் சென்றார். மீண்டும் வீடு திரும்பவில்லை. சகோதரி ஜோதிமணி சிறுமுகை போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். போலீசார் தேடி வந்த நிலையில், புதுக்காடு பவானி ஆற்றின் அருகே, சடலமாக இருந்த இவரை மீட்டனர். மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர்.---
