/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
துவக்க பள்ளியில் கலைத்திருவிழா
/
துவக்க பள்ளியில் கலைத்திருவிழா
ADDED : அக் 21, 2024 11:41 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சூலுார்: சுல்தான்பேட்டை ஒன்றியம், கள்ளப்பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில், குறுமைய கலை விழாவை, வட்டார கல்வி அலுவலர் பிரான்சிஸ் சார்லஸ் துவக்கி வைத்தார்.
குறுமையத்துக்கு உட்பட்ட பல்வேறு பள்ளிகளை சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
முதல் மற்றும் இரண்டாம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு தமிழ் ஒப்புவித்தல், வண்ணம் தீட்டுதல், மாறுவேட போட்டி, ஆங்கில பாடல் பாடுதல், கதை கூறுதல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர், ஆசிரியைகள் பங்கேற்றனர்.