ADDED : மார் 18, 2025 05:22 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை, : கோவை பி.எஸ்.ஜி., கலை அறிவியல் கல்லுாரி விஷூவல் கம்யூனிக்கேஷன் துறை சார்பில், 'பதிவுகள்' என்ற பெயரில், தென்னிந்திய அளவிலான குறும்பட விழா நேற்று துவங்கியது.
திரைப்பட இயக்குனர் ஞானவேல் விழாவை துவக்கி வைத்து பேசியதாவது:
நான் வரும் போது ஒரு கல்லுாரிக்குள் நுழைகிறோம் என்ற உணர்வுதான் முதலில் இருந்து. ஆனால் விழா அரங்கத்துக்குள் வந்தவுடன், ஷூட்டிங் நடக்கும் ஸ்டூடியோவுக்குள் இருப்பது போல் உள்ளது. கலை என்பது ஒரு கொண்டாட்டம்.
அந்த உணர்வுடன் செய்தால்தான், கலைப்படைப்பு சிறப்பாக இருக்கும். இது போன்ற சின்னச்சின்ன நுட்பமான கலை நயமிக்க வேலைகள் பெரிய கலை படைப்பை உருவாக்க அடித்தளமாக அமையும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
இயக்குனர் ராஜேஷ்வர், எடிட்டர் அனில் கிரிஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.