/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கலைஞர் கனவு இல்லம்; பணிகள் விறுவிறுப்பு
/
கலைஞர் கனவு இல்லம்; பணிகள் விறுவிறுப்பு
ADDED : ஜூலை 29, 2025 08:31 PM
மேட்டுப்பாளையம்; இழுப்பநத்தம் ஊராட்சியில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் வீடுகள் கட்டும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
கோவை மாவட்டம் காரமடை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட இழுப்பநத்தம் ஊராட்சி, பெரியார் நகர் பகுதியில் 'கலைஞர் கனவு இல்லம்' திட்டத்தின் கீழ் 57 பேருக்கு தலா ரூ. 3.50 லட்சம் வீதம் ரூ. 1.99 கோடி மதிப்பீட்டில் வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. இதில் 40 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.
17 வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. இந்த பணிகளை அண்மையில் கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார் நேரில் ஆய்வு செய்து, பொருட்களின் தரம் மட்டும் வீட்டின் அளவுகள் போன்றவைகளை பார்வையிட்டார்.
மேலும், பணிகளை விரைவாக முடிக்க உத்தரவிட்டார். இதையடுத்து, தற்போது பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.