/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவில்களில் இன்று ஆருத்ரா தரிசனம்
/
கோவில்களில் இன்று ஆருத்ரா தரிசனம்
ADDED : ஜன 12, 2025 11:09 PM
பொள்ளாச்சி; பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில், ஆருத்ரா தரிசன விழா இன்று (13ம் தேதி) நடக்கிறது.
பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவிலில் ஆருத்ரா தரிசனத்தையொட்டி கடந்த, 4ம் தேதி மாணிக்கவாசகர் உற்சவம் துவங்கியது. தொடர்ந்துநேற்று இரவு, 7:00 மணிக்கு சிவகாமி அம்மன் ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது.
இன்று (13ம் தேதி) அதிகாலை, 3:00 மணிக்கு நடராஜர்அபிேஷகம், காலை, 9:00 மணிக்கு ஆருத்ரா தரிசனம் நிகழ்ச்சி நடக்கிறது. வரும், 14ம் தேதி மாலை, 5:30 மணிக்கு மஹா அபிேஷகம் நடக்கிறது.
நெகமம் ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில், ஆருத்ரா தரிசன விழாவையொட்டி நேற்று இரவு, 7:00 மணிக்கு மாங்கல்ய நோன்பு, அலங்கார தீபாராதனை பூஜைகள் நடைபெறுகின்றன.
இன்று (13ம் தேதி) அதிகாலை, 4:00 மணிக்கு மஹாபிேஷகம், அதிகாலை, 5:00 மணிக்கு அலங்கார தீபாராதனை, காலை, 6:00 மணிக்கு சுவாமி புறப்பாடு மற்றும் பட்டி சுற்றுதல் நிகழ்ச்சிகள் நடக்கின்றன.
பொள்ளாச்சி மாகாளியம்மன் கோவிலில் ஆருத்ரா தரிசனத்தையொட்டி நேற்று மாலை ருத்ரலிங்கேஸ்வரருக்கு அபிேஷக பூஜை நடக்கிறது. விழாவையொட்டி இன்று (13ம் தேதி) காலை, 7:30 மணிக்கு அலங்கார மகா தீபாராதனை, ஆருத்ரா தரிசனம் நிகழ்ச்சி நடக்கிறது.