ADDED : பிப் 28, 2026 06:26 AM
அ நிறம் | அளவு
தொண்டாமுத்தூர்: பேரூர் தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கலை அறிவியல் தமிழ் கல்லூரியில், குமாரதேவர் மாணாக்கர் அருள்நெறி மன்றத்தின், 37வது ஆண்டு விழா கல்லூரி அரங்கத்தில் நடந்தது.
விழாவில் பேரூர் ஆதினம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் அருளுரையாற்றினார். காமாட்சிபுரி ஆதினம் பஞ்சலிங்கேஸ்வரர் சுவாமிகள் மகிழ்வுரையாற்றினார். தஞ்சை தமிழ் பல்கலையின் முன்னாள் துணைவேந்தர் கருணாகரன் தலைமை வகித்து, உயர்கல்வியில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் சவால்கள் குறித்து எடுத்துரைத்தார்.
பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. கல்லூரி முதல்வர் திருநாவுக்கரசு, கே.ஜி. கலை அறிவியல் கல்லூரி முதல்வர் வித்யா, பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
