/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆறு விக்கெட்களை வீழ்த்திய ஆறுமுகம் லெவன் அணி வீரர்
/
ஆறு விக்கெட்களை வீழ்த்திய ஆறுமுகம் லெவன் அணி வீரர்
ஆறு விக்கெட்களை வீழ்த்திய ஆறுமுகம் லெவன் அணி வீரர்
ஆறு விக்கெட்களை வீழ்த்திய ஆறுமுகம் லெவன் அணி வீரர்
ADDED : செப் 05, 2025 10:15 PM

கோவை:
கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் (சி.டி.சி.ஏ.,) சார்பில், இரண்டாவது டிவிஷன் போட்டி, எஸ்.என்.எம்.வி., - பி.எஸ்.ஜி., உள்ளிட்ட மைதானங்களில் நடந்து வருகிறது.
ஆறுமுகம் லெவன் பேட்ரியாட்ஸ் கிரிக்கெட் கிளப் அணியும், திருப்பூர் கிரிக்கெட் கிளப் அணியும் மோதின.
முதலில் பேட்டிங் செய்த ஆறுமுகம் லெவன் பேட்ரியாட்ஸ் அணியினர், 40 ஓவரி ல் அனைத்து விக்கெட்களையும் இழந்து, 145 ரன் எடுத்தனர். வீரர் சந்தீப் 33 ரன், வெங்கடேஷ் 43 ரன் எடுத்தனர். எதிரணி வீரர் ஹர்சவர்தன் நான்கு விக்கெட் வீழ்த்தினார்.
அடுத்து களம் இறங்கிய திருப்பூர் கிரிக்கெட் கிளப் அணியினர், 37.3 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து,
99 ரன் மட்டுமே எடுத்தனர். வீரர் சத்யன், 44 ரன் எடுத்தார். எதிரணி வீரர் ராஜேஷ் ஆறு விக்கெட் வீழ்த்தினார்.
தொடர்ந்து, போட்டிகள் நடக்கின்றன.