ADDED : ஜூலை 09, 2025 10:49 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடவள்ளி; சாதனா சதன் சத்சங்க மையம் சார்பில், ஆனி மாதம் மூலம் நட்சத்திரத்தையொட்டி, அருணகிரிநாதர் ஜென்ம தின விழா, வடவள்ளியில் உள்ள ஆபத் சகாய சுந்தர விநாயகர் கோவிலில் நேற்று நடந்தது.
காலை, 9:00 முதல் பகல், 12:30 மணி வரை, 108 திருப்புகழ் பாடல்கள் பாடி, இசை வழிபாடு நடந்தது. பகல், 12:00 மணிக்கு, விநாயகர் மற்றும் முருகனுக்கு, சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜை நடந்தது. இதில், 100க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு, திருப்புகழ் பாடினர். இதற்கான ஏற்பாடுகளை, சாதனா சதன் நிறுவனர் ஹரிஹரன், செயலாளர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் செய்திருந்தனர்.