ADDED : ஜன 05, 2026 05:36 AM

அ நிறம் | அளவு
மேட்டுப்பாளையம்: -: மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் சக்தி விநாயகர் கோயில் வளாகத்தில், மனோன்மணி உடனமர் வெள்ளிங்கிரி ஆண்டவர் சன்னதி உள்ளது.
இங்கு திருவாதிரை நட்சத்திரத்தில் ஆருத்ரா தரிசன வைபவம் நடந்தது. கால சந்தி பூஜை முடிந்து, 16 வகை வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து வே ள்வி வழிபாடு நடந்தது.
பின்பு மனோன்மணி உடனமர் வெள்ளிங்கிரி ஆண்டவருக்கு, திருக்கல்யாண வைபவம் நடந்தது. மங்கள ஆரத்திற்கு பின், பக்தர்களுக்கும் திருக்கல்யாண பிரசாதமான மஞ்சள் கயிறு, மஞ்சள் கொம்பு, பூ வலையில், குங்குமம் ஆகியவை வழங்கப்பட்டன.
அன்னதானம் வழங்கப்பட்டது. பூஜைகளை கோயில் அர்ச்சகர் ஜோதி வேலவன் செய்திருந்தார். ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
