/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வெயில் காலம் துவங்குவதால் பட்டுக்கூடு விலை உயரும்
/
வெயில் காலம் துவங்குவதால் பட்டுக்கூடு விலை உயரும்
ADDED : பிப் 01, 2024 12:04 AM
கோவை : வெயில்காலம் துவங்குவதால், பட்டுக்கூடு விலை அதிகரிக்கும் என, பட்டுக்கூடு விவசாயிகள் தெரிவித்தனர்.
கோவை, பாலசுந்தரம் ரோட்டில் பட்டு வளர்ச்சித்துறையின் பட்டுக்கூடு விற்பனை அங்காடி உள்ளது. இங்கு கோவை, திருப்பூர், கோபி மற்றும் ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து, பட்டு விவசாயிகள் பட்டுக்கூடுகளை கொண்டு வந்து, விற்பனை செய்து வருகின்றனர்.
கடந்த சில மாதங்களாக, பனிப்பொழிவு அதிகமானதால் பட்டுக்கூடு உற்பத்தி குறைந்து, விலை அதிகரித்தது. ஒரு கிலோ 510 ரூபாய் வரை விற்பனையானது.
கடந்த மாதம் 15ம் தேதிக்கு பிறகு, விலை குறைந்தது. நேற்று முன் தினம், ஒரு கிலோ முதல் ரக பட்டுக்கூடு 476 ரூபாய்க்கும், அடுத்த ரகம் 420 ரூபாய்க்கும் விற்பனையானது.
இதுகுறித்து, பட்டு விவசாயி ஒருவர் கூறுகையில், 'வெயில் காலம் துவங்குவதால், பட்டுக்கூடு உற்பத்தி குறையும். ஆனால் நுால் தேவை அதிகரிக்கும். அதனால் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது,'' என்றார்.