sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 10, 2026 ,மாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 வழக்கம்போல அ.தி.மு.க. வெளிநடப்பு

/

 வழக்கம்போல அ.தி.மு.க. வெளிநடப்பு

 வழக்கம்போல அ.தி.மு.க. வெளிநடப்பு

 வழக்கம்போல அ.தி.மு.க. வெளிநடப்பு


ADDED : மார் 07, 2026 06:39 AM

Google News

ADDED : மார் 07, 2026 06:39 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: கோவை மாநகராட்சி அவசர கூட்டம் நேற்று நடந்தது. மேயர் ரங்கநாயகி தலைமை வகித்தார். 67 தீர்மானங்கள் நிறைவேறுவதாக மேயர் அறிவித்தார். அ.தி.மு.க.வினர் அதை ஆட்சேபித்தனர்.

பிரபாகரன் (வார்டு 47): கடந்த மாதம் அவசர கூட்டம் நடத்தினீர்கள். இந்த மாதமும் அவசர கூட்டம் நடத்துகிறீர்கள். 5 மாதம் முன்பு விடப்பட்ட டெண்டர்களுக்கு, இப்போது அனுமதி கேட்கிறீர்கள். ஏன் இந்த தாமதம்?

மேயர்: நீங்கள் ஒருத்தர்தான் எப்போதும் கேள்வி கேட்கிறீர்கள். மன்றத்தை அவமதிக்கும் வகையில் செயல்படுறீங்க. ஒவ்வொரு வார்டிலும் அதிகமான வேலைகள் நடக்கின்றன. அதை தாங்க முடியாமல் எதிர்க்கிறீர்கள்.

மீனா (வா.46), கதிர்வேல் (வா.10): இவுங்களுக்கு ஏன் மேயர் பதில் சொல்கிறீர்கள். வெளிநடப்பு செய்யட்டும், விடுங்க.

அ.தி.மு.க. கவுன்சிலர்கள் பிரபாகரன், ரமேஷ் இருவரும், 'கண்டிக்கிறோம்... கண்டிக்கிறோம்... மேயரை கண்டிக்கிறோம். அவசர கூட்டம் எதற்கு, தீர்மானங்கள் எதற்கு?' என கோஷமிட்ட படி வெளிநடப்பு செய்தனர்.

லக்குமி இளஞ்செல்வி (வா.52): பப்ளிசிடிக்காக அ.தி.மு.க. கவுன்சிலர்கள் இப்படி செய்கின்றனர். அ.தி.மு.க. ஆட்சியில் இந்த மன்றத்தில் பேச எதிர்க்கட்சியை அனுமதித்ததே இல்லை. இப்போது தாராளமாக பேச விடுகிறீர்கள். அதை தவறாக பயன்படுத்துகிறார்கள்.

ராமமூர்த்தி (வா.12): பிரபாகரன் நடத்தைக்கு மா.கம்யூ. கண்டனத்தை பதிவு செய்கிறேன். அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கதிர்வேல் (வா.10): ஆமாம், நடவடிக்கை எடுக்காவிட்டால், மன்றத்தின் மாண்பு குறைந்து விடும்.

முபஷீரா (வா.82): நான் வரி விதிப்பு குழு தலைவர். எந்த தீர்மானமும் என் குழுவுக்கு வரவில்லை. எங்களிடம் கையெழுத்து வாங்காமல், மன்றத்துக்கு எப்படி கொண்டு வந்துள்ளீர்கள்?

உதவி கமிஷனர் (வருவாய்) மகேஷ் கனகராஜ்: உங்களை தொடர்பு கொள்ள முயன்றோம். முடியவில்லை.

முபஷீரா: போனை எடுக்காவிட்டால் மெசேஜ் அனுப்பி இருக்கலாமே. குழு அனுமதி இல்லாமல் மன்றத்துக்கு தீர்மானம் வரக்கூடாது. இனி இப்படி தவறு செய்யாதீர்கள்.

நோட்டீஸ் மேல் நோட்டீஸ்... ஜனங்க கோபப்படுறாங்க பாஸ்!

செட்டிபாளையம் ரோட்டில் உள்ள மாடு அறுவை மனையில் கட்டணம் வசூலிக்கும் உரிமத்துக்கான ஏலத்தில், அரசு நிர்ணயித்த தொகை ரூ.25.35 லட்சம். ஆனால், 90 லட்சத்துக்கு ஏலம் போனது. ஏலம் கோரியவருக்கு உரிமம் வழங்கும் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இது குறித்து கார்த்திகேயன் (வா.100) பேசுகையில், ''போட்டி போட்டு ஏலம் கேட்டுள்ளனர். அரசுக்கு அதிக வருவாய் கிடைக்கும். ஆனால் மக்களிடம் எவ்வளவு கட்டணம் வசூலிப்பார்கள். சுகாதாரமாக பராமரிக்க வேண்டும். மாடுகளை ரோட்டில் போட்டு அறுக்கக் கூடாது,'' என்றார். சாந்தி (வா.41), ராமமூர்த்தி (வா.12) ஆகிய இருவரும், 'டர்ப் மைதானத்தை பராமரிக்கும் பொறுப்பை தனியாரிடம் வழங்கக் கூடாது. ஒப்பந்த முறையில் தொழிலாளர்கள் நியமிக்க தீர்மானம் நிறைவேற்றி உள்ளீர்கள். இதை கைவிட்டு நிரந்தர பணியாளர்கள் நியமிக்க வேண்டும்' என்று பேசினர். வா.98 சேர்ந்த உதயகுமார் பேசுகையில், ''தெற்கு மண்டலத்தில் பாதாள சாக்கடை இணைப்பு வேலை 25 சதவீதம்தான் முடிந்திருக்கிறது; இணைப்பு கொடுக்க ரூ.30,000 - 35,000 செலுத்த, வீடு வீடாக நோட்டீஸ் கொடுத்தனர். இப்போது, மாதந்தோறும் ரூ.250 செலுத்த கூறி, மீண்டும் நோட்டீஸ் கொடுக்கின்றனர். மக்கள் கோபப்படுகிறார்கள். நோட்டீஸ் கொடுப்பதை நிறுத்துங்கள்,'' என்றார்.








      Dinamalar
      Follow us