/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தொண்டாமுத்தூர் வட்டாரத்தில் சின்ன வெங்காயம் அறுவடை
/
தொண்டாமுத்தூர் வட்டாரத்தில் சின்ன வெங்காயம் அறுவடை
தொண்டாமுத்தூர் வட்டாரத்தில் சின்ன வெங்காயம் அறுவடை
தொண்டாமுத்தூர் வட்டாரத்தில் சின்ன வெங்காயம் அறுவடை
ADDED : மார் 07, 2026 06:40 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தொண்டாமுத்தூர்: தொண்டாமுத்தூர் வட்டாரத்தில், தை பட்டத்தில் சாகுபடி செய்த சின்ன வெங்காய அறுவடை துவங்கியுள்ளது.
தொண்டாமுத்தூர் வட்டாரத்தில் 20,000 ஏக்கர் பரப்பளவில், சின்ன வெங்காயம் சாகுபடி செய்து வருகின்றனர். இந்தாண்டு, தை பட்டத்தில், 3 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில், சின்ன வெங்காயம் சாகுபடி செய்தனர். தை பட்டத்தில் சாகுபடி செய்த சின்ன வெங்காய அறுவடை துவங்கியுள்ளது.
தொண்டாமுத்தூர் வட்டார விவசாயிகள் கூறுகையில், 'இந்த முறை நல்ல விளைச்சல் கிடைத்துள்ளது. அறுவடை செய்த வெங்காயத்தை, பட்டறையில் அடைத்து சேமிக்கிறோம். நல்ல விலை கிடைத்தால், விற்பனை செய்வோம்' என்றனர்.