/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அறிவியல் கண்காட்சியில் அசத்திய வித்யாஷ்ரம் பள்ளி
/
அறிவியல் கண்காட்சியில் அசத்திய வித்யாஷ்ரம் பள்ளி
ADDED : நவ 11, 2024 05:09 AM

கோவை: சி.பி.எஸ்.இ., நடத்திய மண்டல அளவிலான பள்ளிகளுக்கு இடையேயான அறிவியல் கண்காட்சி எஸ்.எஸ்.வி.எம்., பள்ளியில் நடந்தது. இதில், பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் சார்பில், 92 செயல்திட்டங்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டது.
கோவை வித்யாஷ்ரம் பள்ளி ஏழாம் வகுப்பு மாணவர்கள் ஜித்தேஷ் மற்றும் சுகித்ரன் ஆகியோரது செயல் திட்டம், சிறந்ததாக தேர்வு செய்யப்பட்டது. அடுத்து நடக்க உள்ள, தேசிய அளவிலான அறிவியல் கண்காட்சிக்கு மாணவர்கள் தகுதி பெற்றனர்.
மாணவர்களையும் இவர்களுக்கு துணையாக இருந்த அறிவியல் ஆசிரியை மேகலாதேவியையும், கோவை வித்யாஷ்ரம் பள்ளியின் தாளாளர் மற்றும் இயக்குனர் தேன்மொழி, பள்ளி முதல்வர் நந்தினிபாய் பாராட்டி வாழ்த்தினர்.