/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வாராஹி அம்மன் கோவிலில் ஆஷாட நவராத்திரி விழா
/
வாராஹி அம்மன் கோவிலில் ஆஷாட நவராத்திரி விழா
ADDED : ஜூலை 03, 2025 09:27 PM

பொள்ளாச்சி; பொள்ளாச்சி, திப்பம்பட்டி மும்மூர்த்தி ஆண்டவர் வாராஹி அம்மன் கோவிலில், ஆஷாட நவராத்திரி விழா கடந்த மாதம் 25ம் தேதி துவங்கியது. அன்றைய தினம் காலை, 9:05 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசனம், பஞ்சகவ்ய பூஜைகள் நடைபெற்றன.
அம்மனுக்கு கங்கணம் கட்டப்பட்டு ஹோமம், அபிேஷக அலங்கார பூஜைகள் நடைபெற்றன. விழாவை முன்னிட்டு, ஒன்பது நாட்களுக்கு ஹோமங்கள், அபிேஷக , அலங்கார பூஜைகள் நடக்கிறது. ஒவ்வொரு நாளும், இனிப்பு, அலங்காரம், மஞ்சள், குங்குமம், சந்தனம், மாதுளை, தேங்காய், பூ, நவதானியம் மற்றும் வளையல் அலங்காரம் என, அம்மன் அருள்பாலித்தார். இறுதி நாளான இன்று மாலை, 4:30 மணிக்கு யாகவேள்வி, மகாஅபிேஷகம், ராஜ அலங்கார தீபாராதனையுடன் விழா நிறைவடைகிறது.