/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவையில் துவங்கியது ஆசியா நகை கண்காட்சி
/
கோவையில் துவங்கியது ஆசியா நகை கண்காட்சி
ADDED : நவ 22, 2025 07:05 AM

கோவை: அவிநாசி ரோடு, தி ரெசிடென்சி டவர் ஓட்டலில், தென்இந்தியாவின் தனித்துவமிக்க, ஆசியா நகைகள் கண்காட்சி நேற்று துவங்கியது.
பெங்களூரு, மும்பை, டில்லி, ஜெய்ப்பூர், ஐதராபாத், சென்னை என இந்திய அளவில் புகழ் வாய்ந்த, உலகத்தரத்தில் வடிவமைப்பு கொண்ட நகைகள் இடம் பெறுகின்றன. 50க்கும் மேற்பட்ட பிராண்டுகளின் நகைகளை, ஒரே கூரையின் கீழ் வாங்கலாம்.
தங்கம், வைரம், பிளாட்டினம், வெள்ளிமற்றும் குந்தன், ஜடாவு, போல்கி போன்றவற்றில் நுண்ணிய வேலைப்பாடுகள் கொண்ட, உயர்தர நகைகள் தேர்வு செய்யப்பட்டு ஒரே இடத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அரிய வகை வைர கற்கள் பதித்த உயர்தர நகைகளை வாங்கலாம்.
நாளை வரை நடைபெறும் கண்காட்சியை, காலை 10.30 முதல் இரவு 8 மணி வரை பார்வையிடலாம். திருமணம் உள்ளிட்ட விழாக்களுக்கு முன்பதிவு செய்துகொள்ளலாம்.

