ADDED : நவ 22, 2025 07:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அன்னுார்: தாலுகா, உள்வட்ட சார் ஆய்வாளர்கள் மற்றும் ஆய்வாளர்கள் பணியிடங்களை நிரப்ப வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு (சங்கம்) சார்பில், கடந்த 18ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் நடைபெற்று வருகிறது.
இதன்படி அன்னுார் தாலுகா அலுவலகத்தில் நேற்றும் பெரும்பாலான ஊழியர்கள் நில அளவைத் துறையில் பணிக்கு வரவில்லை. நில அளவை செய்யக்கோரி வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் சென்றனர். சங்க மாநில செயலாளர் சதீஷ்குமார் கூறுகையில், ''மாவட்டத்தில், 11 தாலுகா அலுவலகங்களில், மொத்தமுள்ள, 126 அலுவலர்களில், 91 பேர் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர், என்றார்.

