/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவாவில் ஆசிய ரோல்பால் 'சாம்பியன்'; வெற்றிக்கு வழிவகுத்த கோவை மாணவி

ADDED : டிச 25, 2024 08:21 PM

கோவை; ஆசிய ரோல்பால் சாம்பியன்ஷிப் போட்டியில், கோவை வீராங்கனை இரு கோல்களுடன், இந்திய அணியின் வெற்றிக்கு வழிவகுத்துள்ளார்.
கோவாவில் 4வது, ஆசிய ரோல்பால் சாம்பியன்ஷிப் போட்டி கடந்த, 16ம் முதல், 19ம் தேதி வரை நடந்தது. இதில், 11 நாடுகளை சேர்ந்த அணிகள் விளையாடின. இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்திய பெண்கள் அணியினர், 3-2 என்ற கோல் கணக்கில், ஈரான் அணியை வீழ்த்தினர்.
இந்திய அணி சார்பில் விளையாடுவதற்கு கடந்த, 11 ஆண்டுகளாக ரோல் பால் பயிற்சி பெறும் கோவையை சேர்ந்த மஹதி, தேர்வு செய்யப்பட்டார். தமிழ்நாடு வேளாண் பல்கலையில் இளங்கலை தோட்டக்கலை படிப்பு பயின்று வரும் இவர், இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்துள்ளார்.
அதாவது, அணியின் மூன்று கோல்களில், மஹதி இரு கோல்கள் அடித்து வெற்றிக்கு வழிவகுத்துள்ளார். அணி தங்கம் பெறகாரணமான மாணவியை, தென்னிந்திய ரோல்பால் சங்க செயலாளர் சுப்ரமணியன், பயிற்சியாளர் ராஜசேகர், சக வீரர்கள் மஹதியை பாராட்டினர்.