sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ஆசியாவின் பெரிய முருகன் சிலை மருதமலையில் அமைக்கப்படும்: அமைச்சர் சேகர்பாபு தகவல்

/

ஆசியாவின் பெரிய முருகன் சிலை மருதமலையில் அமைக்கப்படும்: அமைச்சர் சேகர்பாபு தகவல்

ஆசியாவின் பெரிய முருகன் சிலை மருதமலையில் அமைக்கப்படும்: அமைச்சர் சேகர்பாபு தகவல்

ஆசியாவின் பெரிய முருகன் சிலை மருதமலையில் அமைக்கப்படும்: அமைச்சர் சேகர்பாபு தகவல்

3


ADDED : ஜன 28, 2025 06:23 AM

Google News

ADDED : ஜன 28, 2025 06:23 AM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வடவள்ளி : மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று மாலை நேரில் ஆய்வு செய்தார்.

பின்னர், அவர் நிருபர்களிடம் கூறியதாவது: மருதமலையில் அமைக்கப்பட்டு வரும் லிப்ட் பணிகள், ஏப்ரல் இறுதி அல்லது மே மாதத்தில் நிறைவடைந்து, பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். மருதமலை அடிவாரத்தில், 180 அடி உயரத்தில், கல்லினால் ஆன முருகன் சிலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சாத்தியக்கூறு உறுதி செய்யப்பட்டதும், ஆசியாவிலேயே அதிக உயரம் கொண்ட முருகன் சிலையை, நிறுவுவதற்கான பணிகள் மேற்கொள்வோம். முதற்கட்டமாக, 6.50 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகளுடன், ஏப்ரல் 4ம் தேதி கும்பாபிஷேகம் நடத்தப்படும். இரண்டாம் கட்டமாக, ரூ.11 கோடியில் திட்டப்பணிகளும், மூன்றாம் கட்டமாக, ரூ.23 கோடியில் பெருந்திட்ட வளாக பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளன.

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்.வெள்ளியங்கிரி மலை ஏறும் பக்தர்களுக்கு, தேவையான வசதிகள் செய்து தரப்படும். இந்தாண்டு முதல் மலையேறும் பக்தர்களுக்கு, உடல் பரிசோதனை மேற்கொள்ளப்படும். பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், தமிழிலும் குடமுழுக்கு நடைபெறும்.

90 கோவில்களில் குடமுழுக்கு


தி.மு.க., ஆட்சியில், 90 முருகன் கோவில்களில் குடமுழுக்கு நடந்துள்ளது. 60 முதல் 70 வயதிலான மூத்த குடிமக்களை, அறுபடை வீடுகளுக்கு அரசு மானியத்தில், ஆன்மிக சுற்றுலா அழைத்து செல்லும் திட்டத்தில், இதுவரை, 1,622 பேர் பயனடைந்துள்ளனர்.

தமிழகத்தில் உள்ள முருகன் கோவில்களில், ஏழு முருகன் கோவில்கள் பெருந்திட்ட வரைவிற்கு எடுத்து கொள்ளப்பட்டுள்ளன. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், 400 கோடி ரூபாய் மதிப்பில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பழனி தண்டாயுதபாணி கோவிலில், முதல் பெருந்திட்ட வரையில், 99 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகளும், இரண்டாம் பெருந்திட்ட வரைவில், 50 கோடி ரூபாய் மதிப்பில், நில ஆர்ஜிதம் செய்யும் பணியும், திருத்தணியில் 183 கோடி ரூபாய் மதிப்பில், பெருந்திட்ட வரைவு தயார் செய்யப்பட்டுள்ளது.

சிறுவாபுரி திருக்கோவிலில், 16 கோடி ரூபாயில் பணிகள் துவங்கப்பட்டுள்ளன. திருச்சி, வயலூர் முருகன் கோவிலில், அடுத்த மாதம் 19ம் தேதி கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. அங்கும், 30 கோடி ரூபாயில் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

ஊட்டி, காந்தல் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், ரூ.16 கோடியில் பெருந்திட்ட வரைவு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இந்த ஏழு முருகன் கோவில்களில் மட்டும், 872 கோடி ரூபாய் செலவில், பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறு, அவர் கூறினார். முதன்மை செயலாளர் சந்திரமோகன், கோவை கலெக்டர் கிராந்தி குமார் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us