sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கொப்பரை உற்பத்திக்கு விலை நிர்ணயம் செய்ய... எங்களிடமும் கேளுங்க! விவசாயிகள் மத்திய, மாநில அரசுக்கு கோரிக்கை

/

கொப்பரை உற்பத்திக்கு விலை நிர்ணயம் செய்ய... எங்களிடமும் கேளுங்க! விவசாயிகள் மத்திய, மாநில அரசுக்கு கோரிக்கை

கொப்பரை உற்பத்திக்கு விலை நிர்ணயம் செய்ய... எங்களிடமும் கேளுங்க! விவசாயிகள் மத்திய, மாநில அரசுக்கு கோரிக்கை

கொப்பரை உற்பத்திக்கு விலை நிர்ணயம் செய்ய... எங்களிடமும் கேளுங்க! விவசாயிகள் மத்திய, மாநில அரசுக்கு கோரிக்கை


ADDED : செப் 06, 2024 02:34 AM

Google News

ADDED : செப் 06, 2024 02:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி;'தென்னை விவசாயிகளின் கருத்துக்களை கேட்டு, கொப்பரை உற்பத்திக்கான விலை நிர்ணயம் செய்ய சரியான புள்ளி விபரங்களை பரிந்துரைக்க வேண்டும்,' என, விவசாயிகள் வலியுறுத்தினர்.

தமிழகம் முழுவதும் ஆதார விலை திட்டத்தின் கீழ், கொப்பரை கொள்முதல் செய்யப்படுகிறது. மத்திய அரசின் ஆதார விலை திட்டத்தில், 111.60 ரூபாய்க்கு ஒரு கிலோ கொப்பரை கொள்முதல் செய்யப்பட்டது. ஆனால், உற்பத்தி செலவை விட, குறைந்தளவு விலை நிர்ணயம் செய்வதால், விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுவதாக ஆண்டுதோறும் புகார் கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த வாரம் கொப்பரை கொள்முதலில் விலை நிர்ணயம் செய்வதற்கு முன், விவசாயிகளின் கொப்பரை களங்களில், மத்திய வேளாண்துறை விவசாய செலவுகள் மற்றும் விலை (கொப்பரை) நிர்ணயம் செய்வதற்கான ஆணைய தலைவர் விஜய்பால் ஷர்மா, உறுப்பினர் நவீன்சிங் ஆகியோரிடம், கொப்பரை கிலோவுக்கு, 150 ரூபாய் நிர்ணயிக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர். தொடர்ந்து, வேளாண்துறை அமைச்சர் பன்னீர்செல்வத்தை, கோவையில் சந்தித்து விநாயகா தென்னை உற்பத்தியாளர் நிறுவனத்தினர் மற்றும் விவசாயிகள் வலியுறுத்தினர்.

உற்பத்தி அளவு


ஒரு கிலோ கொப்பரை உற்பத்தி செய்ய ஏற்படும் செலவு குறித்து, விநாயகா தென்னை உற்பத்தியாளர் நிறுவனம், தமிழ்நாடு தென்னை விவசாயிகள், உற்பத்தியாளர் நிறுவன நட்பமைப்பு சார்பில், வேளாண்துறை மற்றும் அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர்.

மனுவில் கூறியிருப்பதாவது: ஒரு ெஹக்டேரில், 175 மரங்கள் இருந்தால், அவற்றில், 165 மரங்களில், காய்கள் காய்க்கும். எனினும், 175 மரங்களுக்கு தேவையான செலவுகளை விவசாயிகள் மேற்கொள்ள வேண்டியுள்ளது. ஆண்டுக்கு மொத்தம், 20,265 தேங்காய்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

செலவுகள் ஏராளம்


ஒரு மரத்துக்கு ஆண்டுக்கு, 125 காய்களும்; தேங்காயின் எடை, 450 கிராமும் இருக்கும். கொப்பரை, ஆறு சதவீத ஈரப்பதத்துடன், 120 கிராமும் கிடைக்கும். ஆண்டுக்கு, வேலையாட்கள் கூலி, நீர்பாசனத்துக்கு என, மொத்தம், ஒரு லட்சத்து, 80 ஆயிரம் ரூபாய் செலவாகிறது.

உழவு ஓட்டுதலுக்கு, 9,900 ரூபாயும், பாத்தி கட்டுதலுக்கு, ஆண்டுக்கு, 14,000 ரூபாயும் செலவாகிறது. உரங்கள் செலவு என 49, ஆயிரம் ரூபாய், உரமிடுதல் கூலிச் செலவு, 3,600 ரூபாய் ஆகிறது.

இதுபோன்று, அறுவடை, போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு செலவுகளும் உள்ளன. அனைத்து செலவுகளையும் சேர்த்தால், ஒரு கிலோ கொப்பரை தயாரிக்க, 150.20 ரூபாய் செலவு ஏற்படுகிறது.

மேலும், தேங்காய் உற்பத்திக்கான உண்மையான விலை கிலோவுக்கு, 38.62 ரூபாயாகும். ஒரு டன், 40 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கினால் தான் விவசாயிகள் பயன்பெற முடியும். எனவே, இந்த விலை நிர்ணயித்தால் மட்டுமே பலன் கிடைக்கும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

சரியான புள்ளிவிபரம் அனுப்புங்க!

விநாயகா தென்னை உற்பத்தியாளர் நிறுவன தலைவர் பத்மநாபன் கூறியதாவது:ஒரு கிலோ கொப்பரை உற்பத்தி செய்ய, 150.20 ரூபாய் ஆகிறது. ஆனால், மாநில புள்ளியியல் துறை சார்பில், 96 ரூபாய் உற்பத்தி செலவினமாகவும், ஒரு மரத்துக்கு, 75 காய்கள் தான் கிடைக்கும் என குறைத்து கணக்கு காண்பிக்கப்படுகிறது.இதனால், விவசாயிகளுக்கு செலவுக்கேற்ப விலை நிர்ணயம் இல்லாததால் பாதிப்பு ஏற்படுகிறது.தேங்காய் உற்பத்திக்கான புள்ளி விபர பட்டியலையும், உற்பத்திக்கான செலவின விபரங்களையும் மாநில புள்ளியியல் துறை, மாநில தென்னை விவசாயிகள் கருத்துக்களை பெற்று மத்திய அரசுக்கு சரியான புள்ளி விபரங்களை பரிந்துரைக்க வேண்டும்.அதற்கான ஒருங்கிணைப்பு கூட்டத்தை, வேளாண் உற்பத்தி ஆணையர் தலைமையில் நடத்த வேண்டும் என, கோவை வந்த வேளாண்துறை அமைச்சர் பன்னீர்செல்வத்திடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது.மேலும், ரேஷன் கடைகளில், பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.இவ்வாறு, அவர் கூறினார்.








      Dinamalar
      Follow us