சட்டசபை தேர்தல் பயிற்சி வகுப்பு: வால்பாறை ஆசிரியர்கள் குமுறல்
சட்டசபை தேர்தல் பயிற்சி வகுப்பு: வால்பாறை ஆசிரியர்கள் குமுறல்
ADDED : மார் 19, 2026 05:46 PM
வால்பாறை: தேர்தல் பயிற்சி என்ற பெயரில் ஆசிரியர்களை அதிகாரிகள் மனஉளைச்சலுக்கு ஆளாக்கி வருவதாக ஆசிரியர் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
வால்பாறை சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பகுதியில், வால்பாறை மேல்தொகுதி, ஆனைமலை அமைந்துள்ளது. இந்நிலையில் வால்பாறை மலை பகுதியில் பணிபுரியும், 300க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இவர்களுக்கான தேர்தல் பயிற்சி வகுப்புகள் பொள்ளாச்சியில் நடத்தப்படுகிறது. இதனால் ஆசிரியர்கள், 64 கி.மீ.,தொலைவில் உள்ள பொள்ளாச்சிக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. ேஷக்கல்முடி, புதுக்காடு, முருகாளி உள்ளிட்ட பகுதியிலிருந்து தேர்தல் பயிற்சிக்காக செல்லும் ஆசிரியர்கள், 100 கி.மீ, துாரம் பயணம் செய்ய வேண்டி நிலை உள்ளது.
இது குறித்து, வால்பாறை ஆசிரியர் கூட்டமைப்பு நிர்வாகிகள் மாவட்ட கலெக்டரும், தேர்தல் அதிகாரியுமான பவன்குமாரிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:
வால்பாறை சட்டசபை தொகுதியில் தேர்தலுக்கான மண்டல தேர்தல் அலுவலர்கள் நியமனத்தில் தேர்தல் அதிகாரிகள் ஆசிரியர்களை அவமதிக்கும் நோக்கில், அவமரியாதையாக பேசிவரும் தேர்தல் தாசில்தார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், வால்பாறை மலைப்பகுதியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான தேர்தல் பயிற்சி வகுப்புக்களை ஏற்கனவே நடத்தியது போல், வால்பாறை அரசு கல்லுாரியில் நடத்த வேண்டும்.
இவ்வாறு, தெரிவித்துள்ளனர்.
