ADDED : ஏப் 20, 2026 07:55 PM
அ நிறம் | அளவு
வால்பாறை: சட்டசபை தேர்தல் காரணமாக, சுற்றுலா பயணியர் வால்பாறைக்கு வந்து செல்ல தடை விதித்தக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வரும், 23ல் சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதனையடுத்து சுற்றுலா தலங்களில் தேர்தல் நடைபெறும் நாளில் சுற்றுலா பயணியர் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, மாவட்ட தேர்தல் அதிகாரிகள் கூறுகையில், 'கோவை மாவட்டம் வால்பாறைக்கு கோடை விடுமுறையில் சுற்றுலா பயணியர் அதிகளவில் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், சட்டசபை தேர்தல், வரும், 23ல் நடப்பதையொட்டி அன்றைய தினம் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் தேர்தல் பணிகள் காரணமாக மாவட்டத்தின் அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்படும். அருவி, பூங்கா உள்ளிட்ட அனைத்து சுற்றுலா தலங்களுக்கு தேர்தல் நாளில் சுற்றுலா செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது,' என்றனர்.
