/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மெல்ல கற்கும் மாணவர்களுக்கு மதிப்பீட்டுத் தேர்வு துவங்கியது
/
மெல்ல கற்கும் மாணவர்களுக்கு மதிப்பீட்டுத் தேர்வு துவங்கியது
மெல்ல கற்கும் மாணவர்களுக்கு மதிப்பீட்டுத் தேர்வு துவங்கியது
மெல்ல கற்கும் மாணவர்களுக்கு மதிப்பீட்டுத் தேர்வு துவங்கியது
ADDED : ஆக 27, 2025 10:38 PM
கோவை; அரசுப் பள்ளிகளில் மெல்லக் கற்கும் மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்தும் நோக்கில், 'திறன் இயக்கம்' என்ற திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தமிழ், ஆங்கிலம் மற்றும் கணக்கு பாடங்களில் பின்தங்கிய மாணவர்கள் அடையாளம் காணப்பட்டு, ஒரு மாதத்துக்கு சிறப்பு வகுப்பு நடத்தப்படுகிறது. ஒவ்வொரு பாடத்துக்கும் தலா 90 நிமிடம் என தனி வகுப்பு எடுக்கப்படுகிறது. இந்த வகுப்புகளை ஆசிரியர்கள் சுழற்சி முறையில் மேற்கொள்கின்றனர்.
இம்மாணவர்களுக்கு வாரந்தோறும், மதிப்பீட்டுத் தேர்வு நடத்தப்படுகிறது. தற்போது, மாதாந்திர மதிப்பீட்டுத் தேர்வும் துவங்கியுள்ளது. தமிழ் தேர்வு நடத்தப்பட்டுள்ளது. இன்று (28ம் தேதி) ஆங்கிலம், நாளை (29ம் தேதி) கணித தேர்வுகள் நடைபெற உள்ளன.
இவர்கள், 30 நாட்கள் தனிப் பயிற்சிக்குப் பின், மற்ற மாணவர்களுடன் இணைந்து வழக்கமான வகுப்புகளில் படிக்க வேண்டும் என கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.
மாதாந்திர தேர்வுக்குப் பிறகும், பின்தங்கிய மாணவர்களுக்கு மீண்டும் தனி வகுப்பு நடத்தப்படுமா என்பது குறித்து அறிவுறுத்தல் வழங்கப்படவில்லை.