/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசு பள்ளி மாணவர்களுக்கு உதவிகள்
/
அரசு பள்ளி மாணவர்களுக்கு உதவிகள்
ADDED : ஜூன் 02, 2025 11:56 PM
கோவில்பாளையம் : சர்க்கார் சாமக்குளம், அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 759 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
முழு ஆண்டு தேர்வு விடுமுறைக்குப் பிறகு நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன. பள்ளியில் மாணவர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் விழாவில் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் மணிமேகலை தலைமை வகித்தார்.
சர்க்கார் சாமக்குளம் பேரூராட்சி தலைவர் கோமளவள்ளி கந்தசாமி, மாணவ, மாணவியருக்கு, பாட புத்தகங்கள், குறிப்பேடுகள், சீருடைகள், புத்தகப்பை உள்ளிட்ட பொருட்களை வழங்கும் பணியை துவக்கி வைத்தார்.
பேரூராட்சி துணை தலைவர் விஜயகுமார், கல்வி குழு உறுப்பினர் சுரேந்திரன், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் முத்துசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். 759 மாணவ, மாணவியருக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன.

