/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பணியின் போது உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு உதவி
/
பணியின் போது உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு உதவி
பணியின் போது உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு உதவி
பணியின் போது உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு உதவி
ADDED : அக் 21, 2024 04:00 AM

கோவை : பணியின் போது உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு, இ.எஸ். ஐ., சார்பில் ரூ.3.55 லட்சம் உதவித்தொகை வழங்கப்பட்டது.
கோவையில் தனியார் நிறுவனத்தில், பேக்கிங் துறையில் பணியாற்றி வந்த காயத்ரி, 45, பணியின் போது உயிரிழந்தார். அவரது குடும்பத்திற்கு முதல் நிலுவைத் தவணை உதவித்தொகையாக ரூ.3.55 லட்சம் வழங்கும் ஆணை, ராமநாதபுரம் இ.எஸ்.ஐ., சார் மண்டல அலுவலகத்தில் வழங்கப்பட்டது. காயத்ரி குடும்பத்தினருக்கு மாதாந்திர உதவித்தொகையாக, ரூ.11,010 வழங்க நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சியில், குறிப்பிட்ட சில தொழிற்சாலையின் மனித வள மேம்பாட்டு துறை அதிகாரிகளும், பலன் அடைந்தோரின் குடும்பத்தினரும் கலந்து கொண்டு, தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகத்தின் பல்வேறு பலன்களை பற்றி தெரிந்து கொண்டனர். அவர்கள், தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகத்தின் பலன்களை பற்றி தங்கள் சுற்றத்தினருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதாக, உறுதி அளித்தனர்.
இதில் இ.எஸ்.ஐ., சார் மண்டல அலுவலகத்தின் துணை இயக்குனர் (பொறுப்பு) ரவிக் குமார், துணை இயக்குனர் கார்த்திகேயன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.