/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போலி பில்கள் இருந்தால் கடும் நடவடிக்கை ஊராட்சிகளின் உதவி இயக்குனர் எச்சரிக்கை..
/
போலி பில்கள் இருந்தால் கடும் நடவடிக்கை ஊராட்சிகளின் உதவி இயக்குனர் எச்சரிக்கை..
போலி பில்கள் இருந்தால் கடும் நடவடிக்கை ஊராட்சிகளின் உதவி இயக்குனர் எச்சரிக்கை..
போலி பில்கள் இருந்தால் கடும் நடவடிக்கை ஊராட்சிகளின் உதவி இயக்குனர் எச்சரிக்கை..
ADDED : செப் 27, 2024 10:59 PM
அன்னுார்: ''இரண்டு லட்சம் ரூபாய்க்கு மேல் உள்ள பணிகளை அனுமதி பெறாமல் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என உதவி இயக்குனர் எச்சரிக்கை விடுத்தார்.
அன்னூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது.
கோவை மாவட்ட ஊராட்சிகளின் உதவி இயக்குனர் சரவணன், கனவு இல்லம் வீடு கட்டும் திட்டம், 100 நாள் வேலை திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் பேசியதாவது:
ஊராட்சிகளில் 2 லட்சம் ரூபாய்க்கு மேல் மதிப்பீடு உள்ள பணிகளை மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற்ற பிறகே செய்ய வேண்டும்.
இல்லாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். குடிநீர் பணிகள் மற்றும் சுகாதாரப் பொருட்கள் வாங்குவதில் போலி பில்கள் இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். அந்தத் தொகை திரும்ப வசூலிக்கப்படும்.
கூடுதலாக தொகை எடுக்கப்பட்டது தெரிய வந்தால், ஊராட்சி செயலரும், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலருமே பொறுப்பேற்க வேண்டும். தவறு செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க ஊரக வளர்ச்சித் துறை இயக்குனர் அறிவுறுத்தியுள்ளார்.
கட்டட வரைபட அனுமதிக்கு, ஒரு சதுர மீட்டருக்கு 162 ரூபாய் வசூலிக்க வேண்டும். அதை கிராம சபையில் வைத்து ஒப்புதல் பெற வேண்டும். சொத்து வரி, தொழில் வரி, குடிநீர் கட்டணம், உரிமக் கட்டணம் வசூலிக்க ஊராட்சியில் குறைந்தது மூன்று இடங்களில் சிறப்பு முகாம் நடத்த வேண்டும். இன்னும் ஒரு வாரத்திற்குள் 50 சதவீத வரி வசூல் இலக்கை முடிக்க வேண்டும்.
இவ்வாறு உதவி இயக்குனர் பேசினார்.
கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உமா சங்கரி, ரவீந்திரன், ஒன்றிய பொறியாளர்கள் தங்கமணி, சந்திரலேகா, துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி செயலர்கள் பங்கேற்றனர்.