/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விதைச்சான்று உதவி இயக்குனர் விதைப்பண்ணையில் ஆய்வு
/
விதைச்சான்று உதவி இயக்குனர் விதைப்பண்ணையில் ஆய்வு
ADDED : பிப் 20, 2024 10:54 PM
பொள்ளாச்சி:பொள்ளாச்சி அருகே, ஆதார நிலை விதைப்பண்ணையை, விதைச்சான்று உதவி இயக்குனர் ஆய்வு செய்தார்.
கிணத்துக்கடவு அருகே அரசம்பாளையத்தில், நிலக்கடலை விதைப்பண்ணையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.நிலக்கடலையில், அதிகமாக விவசாயிகள் பயிரிடும், பி.எஸ்.ஆர்., 2 மற்றும் தரணி ரகங்கள், ஆதார நிலை, விதைப்பண்ணைகள், பூக்கும் பருவத்தில் அதன் குணாதிசயங்கள் மற்றும் வளர்ச்சி குறித்து ஆய்வு செய்யப்பட்டன.
விதைச்சான்று உதவி இயக்குனர் நர்கீஸ் கூறுகையில், ''இந்த இரண்டு ரகங்களும், 100 முதல், 105 நாட்கள் வரை சாகுபடி காலம் கொண்டது. சராசரியாக, 1,000 முதல், 1,500 கிலோ வரை ஒரு ஏக்கருக்கு மகசூல் கிடைக்கும். இது, 41 சதவீதம் எண்ணெய் சத்து உடையதாகும்.
மேலும், 45வது நாளில், ஜிப்சம் ஒரு ஏக்கருக்கு, 160 கிலோ இடுதல் வேண்டும். ஜிப்சம் ஆனது கால்சியம் மற்றும் சல்பர் என்ற தனிமங்களை கொண்டது. கால்சியம் விதை உருவாகவும், சல்பர் எண்ணெய் விகிதத்தை அதிகரிக்கவும் உதவுகிறது,'' என்றார்.
ஆய்வின் போது, பொள்ளாச்சி விதைச்சான்று அலுவலர் நந்தினி, விதை அலுவலர் உதயகுமார் உடனிருந்தனர்.

