ADDED : டிச 30, 2024 12:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெ.நா.பாளையம்; இடிகரை பேரூராட்சியில் பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் மனோரஞ்சிதம் தலைமையில் இடிகரை கிராம நிர்வாக அலுவலகம், மற்றும் நியாய விலை கடைகளில் தணிக்கை மேற்கொள்ளப்பட்டன.
மேலும், இடிகரை பேரூராட்சியில் பொது மக்களின் குறைதீர் மனுக்கள் பெறப்பட்டு, 170 மனுக்களுக்கு தீர்வு காண துறைவாரியாக அனுப்பி வைக்கப்பட்டன. மேலும், பேரூராட்சி வாயிலாக நடைபெறும் அரசு திட்டப்பணிகள் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
இதில், பேரூராட்சி தலைவர் ஜனார்த்தனன், செயல் அலுவலர் ஜெகதீசன், துணைத்தலைவர் சேகர் மற்றும் கவுன்சிலர்கள் வி.ஏ.ஓ., உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

