தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ உதவி பொறியாளர்கள் பணி இடமாற்றம்

 உதவி பொறியாளர்கள் பணி இடமாற்றம்

 உதவி பொறியாளர்கள் பணி இடமாற்றம்


ADDED : மார் 03, 2026 06:07 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 03, 2026 06:07 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சூலுார்: சூலுார், சுல்தான்பேட்டை ஒன்றிய உதவி பொறியாளர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

சட்டசபை தேர்தல் நெருங்குவதால், ஊரக வளர்ச்சி துறையில் பணியிட மாற்றம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாவட்டத்தில், 10 வட்டார வளர்ச்சி அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதேபோல், உதவி பொறியாளர்கள், இளநிலை பொறியாளர்கள், 11 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

சூலுார் ஒன்றியத்தில் உதவி பொறியாளர் அருண், சுல்தான்பேட்டை ஒன்றியத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அங்கு உதவி பொறியாளராக இருந்த சாந்தி, சூலுாருக்கு மாற்றப்பட்டுள்ளார். கிணத்துக்கடவு ஒன்றிய உதவி பொறியாளர் உலகநாதன் தொண்டாமுத்துாருக்கும், பொள்ளாச்சியில் இருந்த ராஜா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைக்கும் மாற்றப்பட்டுள்ளனர். பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்தில் இளநிலை பொறியாளர் தாமோதர் தாஸ், அன்னுாருக்கும், காரமடை வட்டார இளநிலை பொறியாளர் ஈஸ்வரமூர்த்தி, கிணத்துக்கடவு வட்டாரத்துக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us