/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
முதல்லயே சொல்லியும் கேட்கலை; இப்ப விழுந்துருச்சு கிளை!
/
முதல்லயே சொல்லியும் கேட்கலை; இப்ப விழுந்துருச்சு கிளை!
முதல்லயே சொல்லியும் கேட்கலை; இப்ப விழுந்துருச்சு கிளை!
முதல்லயே சொல்லியும் கேட்கலை; இப்ப விழுந்துருச்சு கிளை!
ADDED : பிப் 06, 2024 12:42 AM

அதிகாரிகள் அலட்சியம்
வேலாண்டிபாளையம், ராஜாஜி நகர், புற்றுக்கண் மாரியம்மன் கோவில் முன்புறம் இருந்த பழைய மரம், அருகிலுள்ள வீட்டின் மேற்கூரையின் மேல் முறிந்து விழுந்தது. உடைந்த மரத்தின் கிளைகளை அகற்ற, அதிகாரிகளிடம் வலியுறுத்தியும் நடவடிக்கையில்லை. விழும் நிலையில் உள்ள மரத்தை முன்பே அகற்றச்சொன்ன போதும், நடவடிக்கை எடுக்கவில்லை.
- சூர்யா, ராஜாஜி நகர்.
துரத்தும் நாய்கள்
கவுண்டம்பாளையம், பி அண்ட் டி காலனி விரிவாக்க ரோட்டில், பத்துக்கும் மேற்பட்ட நாய்கள் கூட்டம், கூட்டமாக சுற்றுகின்றன. சாலையில் நடந்து செல்லவே முடியவில்லை. இரவில் பைக்கில் செல்வோரை நாய்கள் துரத்துவதால், கீழே விழுந்து விபத்திற்குள்ளாகின்றனர்.
- கமலா, கவுண்டம்பாளையம்.
வீணாகும் குடிநீர்
வெள்ளலுார், மகாலிங்கபுரத்தில், கால்வாயில் குடிநீர் குழாய் உடைந்து பெருமளவு தண்ணீர் வீணாகிறது. இப்பகுதியில், குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது. விரைந்து குழாய் உடைப்பை சரிசெய்ய வேண்டும்.
- விவேகானந்தன், ஒண்டிப்புதுார்.
தெருவிளக்கு பழுது
வடக்கு மண்டலம், 15வது வார்டு, ஐ.டி.ஐ., பின்புறம், செல்வ விநாயகர் கோவில் முன் உள்ள ' எஸ்.பி -9, பி -10' என்ற எண் கொண்ட கம்பத்தில், கடந்த 10 நாட்களுக்கும் மேல் தெருவிளக்கு எரியவில்லை. இரவு நேரங்களில், வெளியில் நடமாட அச்சமாக உள்ளது.
- சசிதரன், 15வது வார்டு.
சறுக்கி விழும் வாகனஓட்டிகள்
விளாங்குறிச்சி, சேரன்மாநகரில், சோனா ஸ்டோர் பகுதியில், குறிப்பிட்ட ஒரு பகுதியில் மட்டும் தார் சாலை அமைக்கவில்லை. ஜல்லிக்கற்கள் சாலை முழுவதும் சிதறிக்கிடக்கிறது. பைக்கில் செல்வோர் சறுக்கி விழுகின்றனர். நடந்து செல்லவே சிரமமாக உள்ளது.
- ஜெயராமன், விளாங்குறிச்சி.
ஆபத்தான நிலையில் மின்கம்பம்
சரவணம்பட்டி, விநாய கபுரம், பெரிய கவுண்டர் வீதியில், முருகன் ஸ்டோர் அருகிலுள்ள மின்கம்பம் மோசமாக சேதமடைந்துள்ளது. கான்கிரீட் பெயர்ந்து, கம்பிகள் துருப்பிடித்த நிலையில் உள்ளன. எப்போது வேண்டுமானாலும் விழும் நிலையில் உள்ள கம்பத்தை, உடனடியாக மாற்ற வேண்டும்.
- கார்த்திகேயன், சரவணம்பட்டி.
சாக்கடை அடைப்பு
ஆவாரம்பாளையம், 28வது வார்டு, முத்தமிழ் படிப்பகம் முன்புறம், சாக்கடை கால்வாயை சரிவர துார்வாருவதில்லை. குப்பை, மண் அடைத்து நிற்பதால், கழிவுநீர் தேங்கி நிற்கிறது. கொசு தொல்லை அதிகமாக இருப்பதால், நோய்கள் பரவும் அபாயம் உள்ளது.
- பெருமாள்சாமி, ஆவாரம்பாளையம்.
சாலையோரம் குப்பைமலை
பீளமேடு, பாலன் நகர், 60 அடி ரோட்டில், சாலையின் இருபுறமும் குப்பை மலை போல தேங்கிக்கிடக்கிறது. மண் குவியலும் சாலையின் இருபுறங்களிலும் கிடக்கிறது. சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், குறுகிய சாலையில் வாகனங்களை இயக்க சிரமமாக உள்ளது.
- அருண், பீளமேடு.
தார் சாலையை காணோம்
சுண்டக்காமுத்துார் முதல் ராமசெட்டிபாளையம் வரை, பாதி ரோட்டில் தார் சாலையே இல்லை. கடந்த ஒரு வருடமாக புகார் செய்தும் நடவடிக்கையில்லை. தினமும் சின்ன, சின்ன விபத்துகள் நடக்கின்றன. உயிர்பலி நிகழும் முன், சாலையை விரைந்து சரிசெய்ய வேண்டும்.
- தங்கவேல், சுண்டக்காமுத்துார்.
வீதியே நாறுது
கணபதி, 19வது வார்டு, எம்.கே.பி., காலனியில், கழிவுநீர் செல்லாமல் கால்வாயில் தேங்கி நிற்கிறது. வீதி முழுவதும் இதேபோல் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. குடியிருப்பு முழுவதும் கடும் துர்நாற்றமும், சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது.
- வேல்முருகன், கணபதி.
இருளால் தொடரும் விபத்து
சேரன்மாநகர், 8வது வார்டு, சர்ச் வீதியில், 'எஸ்.பி -28, பி -68' என்ற எண் கொண்ட கம்பத்தில், கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக விளக்கு எரியவில்லை. மூன்று சாலை சந்திக்கும் பகுதி என்பதால், இரவு நேரங்களில் விபத்துகள் நடக்கின்றன.
- ஜெயராமன், சேரன்மாநகர்.
வேகத்தடை வேண்டும்
துடியலுார் - சரவணம்பட்டி ரோடு, வெள்ளக்கிணறில், டான்பாஸ்கோ மற்றும் எஸ்.என்.எஸ்., கல்வி நிறுவனங்கள் எதிரே, சாலையில் இருந்து வேகத்தடை அகற்றப்பட்டது. மாணவர்கள் சாலையை கடக்க சிரமப்படுகின்றனர். அகற்றப்பட்ட வேகத்தடைகளை மீண்டும் அமைக்க வேண்டும்.
- ராஜா, துடியலுார்.