/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குறைந்தது வாழை வரத்து :மெல்ல உயர்கிறது விலை
/
குறைந்தது வாழை வரத்து :மெல்ல உயர்கிறது விலை
ADDED : பிப் 16, 2024 11:53 PM
கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு தினசரி மார்க்கெட்டில், வாழை வரத்து குறைந்துள்ளது என, வியாபாரிகள் தெரிவித்தனர்.
கிணத்துக்கடவு, தினசரி மார்க்கெட்டில் ஏராளமான விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை விற்பனை செய்கின்றனர். தற்போது வாழை வரத்து குறைந்துள்ளதால், விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
நேற்றைய மார்க்கெட் நிலவரப்படி, நேந்திரன்கிலோ -27, கதளி -35,பூவன் -25,சாம்பிராணி -35,செவ்வாழை -50ரூபாய்க்கு விற்பனை ஆனது. கடந்த வாரத்தை விட, பூவன் வகை வாழை கிலோவுக்கு, 11ரூபாய் விலை குறைந்துள்ளது. நேந்திரம் கிலோ -9,கதளி -5, சாம்பிராணி வகை -5ரூபாய் விலை அதிகரித்துள்ளது.
இதுகுறித்து, வியாபாரிகள் கூறுகையில், கடந்த வாரத்தை விட தற்போது விலை அதிகரித்துள்ளது. கோடை காலங்களில் இன்னும் விலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது,' என்றனர்.