/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவில் திருவிழாவில் மக்கள் உற்சாகம் ராட்டினங்களில் விளையாடி மகிழ்வு
/
கோவில் திருவிழாவில் மக்கள் உற்சாகம் ராட்டினங்களில் விளையாடி மகிழ்வு
கோவில் திருவிழாவில் மக்கள் உற்சாகம் ராட்டினங்களில் விளையாடி மகிழ்வு
கோவில் திருவிழாவில் மக்கள் உற்சாகம் ராட்டினங்களில் விளையாடி மகிழ்வு
ADDED : ஜன 18, 2024 12:32 AM

உடுமலை : ஆல்கொண்டமால் கோவில் திருவிழாவை, மாட்டு வண்டிகளில் பயணித்தும், சலகெருதுகளை அழைத்து வந்து சிறப்பு பூஜை நடத்தியும், மக்கள் கோலாகலமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.
உடுமலை அருகே சோமவாரப்பட்டியில், பிரசித்தி பெற்ற ஆல்கொண்டமால் கோவில் உள்ளது. கால்நடை வளம் பெருகவும், அவற்றுக்கு ஏற்படும் பிரச்னைகளுக்கு தீர்வு காணவும், உருவார பொம்மைகளை வைத்து வழிபாடு செய்கின்றனர்.
கோவிலில் பொங்கலையொட்டி மூன்று நாட்கள் திருவிழா நடைபெறும். விழாவையொட்டி, கிராமத்துக்கான சலகெருதுகளை மார்கழி மாத இரவுகளில் ஆடி பழக்கி, கோவிலுக்கு நேற்று அழைத்து வந்து, சிறப்பு பூஜை நடத்தினர்.
திருவிழாவையொட்டி, கோவில் அருகிலுள்ள மைதானத்தில், கேளிக்கை மற்றும் விளையாட்டு சாதனங்கள், தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டிருந்தது.
அங்கு, அமைக்கப்பட்டிருந்த, ராட்டினம் உட்பட பொழுதுபோக்கு சாதனங்களில், விளையாடி உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.
நுாற்றுக்கும் மேற்பட்ட தற்காலிக கடைகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. பாரம்பரிய முறைப்படி, மாட்டு வண்டிகளில் பயணித்து வந்து பூஜைகளில் பங்கேற்றனர்.
கோவிலில், இன்று, காலை, 5:00 மணிக்கு, சிறப்பு அலங்காரம் தீபாராதனை, மாலை, 6:00 மணிக்கு, மகா அபிேஷகம், சிறப்பு அலங்காரமும், இரவு, 9:00 மணிக்கு, சுவாமி திருவீதி உலா, வாணவேடிக்கை நடக்கிறது.