/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அதர்வா சுசூகி ஷோரூம் சுந்தராபுரத்தில் திறப்பு
/
அதர்வா சுசூகி ஷோரூம் சுந்தராபுரத்தில் திறப்பு
ADDED : பிப் 19, 2025 10:31 PM

போத்தனூர்; கோவை சுந்தராபுரத்தில், அதர்வா சுசூகி ஷோரும் மூன்றாவது கிளை நேற்று திறக்கப்பட்டது.
சுந்தராபுரம் அடுத்து, முருகா நகர் பஸ் ஸ்டாப் அருகே அமைக்கப்பட்டுள்ள ஷோரூமை, சுசூகி மோட்டார் சைக்கிள்(இந்தியா) நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கெனிசி உமேடா திறந்து வைத்தார். பழுது நீக்கும் மையத்தையும் குத்து விளக்கேற்றி திறந்து வைத்தார்.
துணை தலைவர் ஹரிகிருஷ்ணன், அதர்வா சுசூகியின் நிர்வாக இயக்குனர் ராஜு, குறிச்சி நகராட்சி முன்னாள் தலைவர் பிரபாகரன், மறுமலர்ச்சி மக்கள் இயக்க தலைவர் ஈஸ்வரன், முன்னாள் கவுன்சிலர் மணிமாறன் மற்றும் ஊழியர்கள் பங்கேற்றனர்.
அதர்வா சுசூகியின் நிர்வாக இயக்குனர் ராஜு கூறுகையில், இங்கு வாகனங்கள் வாங்க கடனுதவியும் செய்து தரப்படும்.
எங்களது நிறுவனம் துவங்கி முதலாமாண்டே 3,600க்கும் மேற்பட்ட வாகனங்களை விற்பனை செய்து, 15 ஆயிரத்திற்கும் அதிகமான வாகனங்களுக்கு சேவை வழங்கியுள்ளோம். இங்கு ஆக்சஸ் ஸ்கூட்டரின் மேம்படுத்தப்பட்ட மாடல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, என்றார்.